Friday 13 July 2018

108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் 5600 கோடி ஊழலா? அன்புமணி ராமதாசின் சுகாதாரத்துறை தந்த பதில் என்ன?


108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் 5600 கோடி ஊழலா? அன்புமணி ராமதாசின் சுகாதாரத்துறை தந்த பதில் என்ன?


2008 நவம்பரில் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் 5600 கோடி ஊழல் நடந்துள்ளது என்று இரண்டு NGO க்கள் உச்சநீதி மன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
ஆதாரம்👇
https://m.timesofindia.com/india/Rs-5600-cr-scam-in-ambulance-services/articleshow/3724428.cms

உடனே அலறியடித்துக் கொண்டு அன்புமணியின் சுகாதார துறை சொன்ன பதில் இதுதான்.

2005 இல் கிராமப்புற சுகாதாரத் திட்டம்(NRHM) அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலிருந்து மாநிலங்களுக்கு பல்வேறு  சுகாதார திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது.  அந்த நிதியை அவர்கள் விரும்பும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் உட்பட பல சுகாதார  திட்டங்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.

In some cases, state governments have preferred to operate ambulance services run by their own facilities. In other cases, the state governments have chosen to provide emergency response services through the public-private participation (PPP) route. In both these cases, funds have been released to state governments through the NRHM,’’ எற்று  சுகாதார துறை விளக்கம் அளிக்கிறது.

மேலும் மாநிலங்கள் தங்களுக்கு கிடைக்கும் நிதியினை எப்படி பயன்படுத்துவது என்பது அந்தந்த மாநிலங்களே முடிவெடுக்கிறது. அதில் மத்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை என நீதிமன்றத்தில் பதில் அளிக்கிறது.

அதாவது 108 திட்டத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று 2008 ல் நீதி மன்றத்தில் சொல்லியுள்ளது.

ஆதாரம்👇
http://creative.sulekha.com/108-ambulance-services-launched-by-anbumani-ramadoss-rs-5600-crores-scam-exposed_454186_blog

108 திட்டம் நான்தான் கொண்டு வந்தேன் என்ற அன்புமணி ராமதாஸ் அதில் 5600 கோடி ஊழல் என்று வழக்கு வந்ததும் மாநிலங்களே திட்டத்தை தங்கள் விருப்பப்படி  நடைமுறை செய்வதாக உச்சநீதி மற்றத்தில்
Affidavit தாக்கல் செய்தது ஏன்?

2005 ஆம் ஆகஸ்டு 15 அன்று ஆந்திரா காங்கிரஸ் முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டியால் துவக்கப்பட்ட திட்டம்தான் இது.

அந்தத் திட்டத்தின் பயனைப் பார்த்த அன்றைய தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்கிடம், ‘108 ஆம்புலன்ஸ் திட்டம் ஆந்திர காங்கிரஸ் முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்டு ஏழை எளியவர்களுக்கு பயனாக இருக்கிறது. இதை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்’ என்று பரிந்துரை செய்தார்.

அதன்பிறகு கொண்டுவரப்பட்டு திட்டம்தான் 108 ஆம்புலன்ஸ் திட்டம். இது கொண்டுவரப்பட்டபோது அன்புமணி மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார்.
அவ்வளவுதான்.

மற்றபடி இதன் முன்னோடி காங்கிரஸ் முதல்வர் மறைந்த ராஜசேகர ரெட்டி

முதன் முதலில் 2005ஆம் ஆண்டு 108 ஆம்புல்ன்ஸ் சேவை முதன்முதலாக ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆந்திர மாநில அரசு, Emergency Management and Research Institute(EMRI) நிறுவனம் ஆகியவற்றின் கூட்டுடன் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு EMRI நிறுவனம் இந்தியாவின் மற்ற மாநில அரசுகளுடன் இணைந்து தனது சேவையை விரிவுபடுத்தியது

இன்று ஆந்திரா, தமிழ்நாடு, குஜராத், உத்ரகாண்ட், கோவா, கர்நாடகா, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இச்சேவை நடைமுறையில் உள்ளது. இப்போது நாடு முழுவதும் உள்ள 108ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 4535. இதன் மூலம் ஆண்டுக்குப் பத்து லட்சம் உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.

தமிழ்நாட்டில் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 15இல் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. இன்று தமிழ்நாட்டில் 629 ஆம்புலன்ஸ்கள் சேவையில் உள்ளதாக EMRIஇன் அறிக்கை சொல்கிறது. இச்சேவை தொடங்கப்பட்ட 2ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 4,11,288 உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளன எனத் தமிழ்நாட்டின் சுகாதாரத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது

இந்த திட்டத்தை விரும்பிய மாநில முதல் மந்திரிகள் மட்டுமே ஏற்றுக்கொண்டனர். கலைஞர் மனது வைக்காதிருந்தால் இத்திட்டம் தமிழகத்தில் வந்தே இருக்காது

அன்புமணி காலத்தில் வந்தது அவ்வளவுதான்.

2005 ஆம் ஆகஸ்டு 15 அன்று ஆந்திரா காங்கிரஸ் முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டியால் துவக்கப்பட்ட  108 ஆம்புலன்ஸ் திட்டத்தை  அன்புமணி ராமதாஸ் நினைத்திருந்தால் 2005 லேயே இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கலாமே  ஏன் செய்யவில்லை.? 2008-09 வரை ஏன் செய்யவில்லை?

காரணம் 108 ஆம்புலன்ஸ் திட்ட செயல்முறை மாநிலங்களின் விருப்பம்

இன்றும் 14 மாநிலங்களில் யூனியன் பிரதேசங்களில் 108 ஆம்புலன்ஸ் திட்டம் கிடையாது.

Antony Parimalam 

1 comment:

  1. அண்ணா இதில் Link open ஆகவில்லை கொஞ்சம் பாருங்க அண்ணா By Siva Lassi

    ReplyDelete