Saturday 7 July 2018

தமிழகத்திற்கு பிரபாகரன் தாயாரை வரவிடாமல் தடுத்தது யார்?

தமிழகத்திற்கு பிரபாகரன் தாயாரை வரவிடாமல் தடுத்தது யார்?

இந்தியாவில் சிகிச்சை பெற பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் விரும்பினார். இதற்காக முறையான விசாவுடன் சென்னைக்கு வந்த அவரை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் மனிதாபிமானம் சற்றும் இல்லாமல் விமானத்திலிருந்து கூட இறங்க விடாமல் தடுத்து திருப்பி மலேசியாவுக்கே அனுப்பி விட்டனர்.

ஏன் தடுக்கப்பட்டார்?

பிரபாகரனின் பெற்றோர்கள் திருச்சியிலிருந்து இலங்கை திரும்பியிருந்த நிலையில், 2003 ஆம் அண்டு மே மாதத்தில், அப்போதைய அதிமுக அரசு, அவர்களுக்கும் தமிழர் தேசிய இயக்கம் உள்ளிட்ட பல அமைப்புக்களுக்கும் இருந்த தொடர்பின் காரணமாக அவர்கள் மீண்டும் இந்தியா வர அனுமதிக்கப்படக்கூடாது என மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதியிருந்தது.
அந்த அடிப்படையில் மத்திய அரசு பிரபாகரன் பெற்றோர் பெயர்களை இந்தியா வர தடைசெய்யப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது.
அதனால்தான் திருப்பி அனுப்பப்பட்டார்

தங்களின்  அரசியல் லாபம் கருதி  தமிழகத்தில் இருந்த தமிழ் தேசியவாதிகள்
பார்வதி அம்மாள் வருகையை ரகசியமாக வைத்திருந்தனர்.

அவர் வந்தது இரவு 10.45

கலைஞர் நண்பர் ஒருவர் மூலம்  இரவு 12 மணிக்கு தகவல் கலைஞருக்கு கிடைக்கிறது. கலைஞர் உடனே விமான நிலைய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது  பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாக கலைஞருக்கு சொல்லப்படுகிறது.

இதுதான் நடந்தது

நாடாளுமன்றத்தில் பார்வதிஅம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட பிரச்சினை திமுகவாலேயே எழுப்பப்பட்டது
முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு பார்வதி அம்மாள் பிரச்சினை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை, தவிரவும் குற்றப் பின்னணி இல்லாத அவருக்கு, மருத்துவ சிகிச்சைக்காக விசா வழங்கப்பட்டும் அவர் திருப்பி அனுப்பப்பட்டது ஏன் என்று வினவினார்

முதல்வர் கலைஞர் சட்டசபையில்  அரசுக்குத் தெரிவிக்காமல் பார்வதி அம்மாள் வந்து விட்டார்  அவருக்கு சிகிச்சை அளிக்க அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும் என்றார். அதன்படி மத்திய அரசுக்கும் கடிதம் எழுதினார்.

இதையடுத்து நிபந்தனைகளுடன் பார்வதி அம்மாள் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதி அளித்தது. இதை  சட்டசபையில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

பார்வதி அம்மாள் பாதுகாப்பு கருதி, அரசின் அரவணைப்பில் அந்த அம்மையார் அரசு குறிப்பிடுகிற மருத்துவமனையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அரசு செலவில் அவர்கள் சிகிச்சை பெற வேண்டும் என்பதுதான் அரசு கூறியிருந்த நிபந்தனை.

ஆனால் மத்திய அரசின் நிபந்தனையுடன் கூடிய சிகிச்சை வாய்ப்பை பார்வதி அம்மாள் தரப்பு நிராகரித்து விட்டது.  திடீரென மலேசியாவிலிருந்து பார்வதி அம்மாள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கேள்விகள்
1) தமிழக முதலமைச்சருக்கு பார்வதி அம்மாள் வருகையை முன் கூட்டியே தெரிவிக்காமல் மறைத்தது யார்? ஏன்?

2) பார்வதி அம்மாள் வருகையே முதலமைச்சரிடம் தெரிவிக்காமல் அவர் பார்வதி அம்மாள் வருகையை தடுத்ததாக எப்படி கலைஞரை குற்றம் சாட்டுகிறீர்கள்?

3) விமான நிலையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது மாநில முதல்மந்திரியால் எப்படி ஒரு பயணியின் இந்திய வருகையை தடுக்க முடியும்?

4) பிரபாகரன் பெற்றோர் இந்திய வருகைக்கு தடை வாங்கிய ஈழத்தாய் ஜெயலலிதாவை குறை சொல்லாமல் கலைஞரை குறை கூறுவது ஏன்?

உண்மை என்னவென்றால் பார்வதி அம்மாளை வரவழைத்து அதன் மூலம் அரசியல் லாபம் பார்ப்பதுடன் வசூலிலும் இறங்கி கூத்தடிக்க நினைத்தனர் தமிழ் தேசியவியாதிகள்.

அது நடக்கவில்லை என்றவுடன் கலைஞர் மீது பாய்ந்து பிராண்டுகிறார்கள்

No comments:

Post a Comment