Wednesday 19 September 2018

திமுக விவசாயிகளுக்கு செய்தது என்ன?( 2006-2011

திமுக விவசாயிகளுக்கு செய்தது என்ன?( 2006-2011)

 1) விவசாயிகள் வாங்கிய 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவு விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு - 22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்கள் பயன் அடைந்துள்ளன.

2) விவசாயிகளுக்கான பயிர்க் கடன் வட்டி 2005-2006-ல் 9 சதவீதம் என இருந்ததை 2006-2007 கழக அரசில் 7 சதவீதமாகக் குறைத்தது

 6,31,283 பேருக்கு 1250 கோடியே 62 லட்ச ரூபாய் கடன்

 2007-2008-ல் 5 சதவீதமாகக் குறைத்து, 6,48,397 பேருக்கு 1393 கோடியே 97 லட்ச ரூபாய் கடன் வழங்கப்பட்டது

 2008-2009-ல் 4 சதவீதமாகக் குறைத்து, 6,91,192 பேருக்கு 1570 கோடியே 99 லட்ச ரூபாயும் கடன் வழங்கப்பட்டது

 2009-2010-ல் பயிர்க்கடன் களை முறையாகத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியை முற்றிலும் ரத்து செய்த புரட்சிகரமான திட்டத்தை இந்தியாவிலேயே முதன் முதலாக அறிவித்து, 8,98,540 பேருக்கு 2169 கோடியே 48 லட்ச ரூபாயும் 2010 - 2011 (15.2.2011) வரை 8 லட்சத்து 1960 விவசாயிகளுக்கு 2453 கோடி ரூபாயும் என 2006-க்குப்பின் மொத்தம் 36 லட்சத்து 71 ஆயிரத்து 372 விவசாயிகளுக்கு 8,838 கோடியே 6 லட்ச ரூபாய் பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளன

 நிலுவையில் உள்ள மேலும் 2 லட்சம் பம்பு செட்டுகளுக்கு படிப்படியாக இலவச மின் இணைப்பு வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


வேளாண் துறைக்காக 2001-2006 ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் 4 ஆயிரத்து 137 கோடியே 34 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு

 2006-2011 ஐந்தாண்டு கால கழக ஆட்சியில் 7 ஆயிரத்து 437 கோடியே 23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

தமிழக நெல் விவசாயிகளின் நிலை உயர, மத்திய அரசு நெல்லுக்கு நிர்ணயிக்கும் விலையுடன் மாநில அரசின் சார்பில் மானியம் வழங்கி விவசாயிகளுக்கு உதவி வருகிறது. அந்த வகையில் 2006-2007-ல் சாதாரகம் குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசு விலை ரூ.580 என நிர்ணயம் செய்தது; கழக அரசு அதனை ரூ.620 என உயர்த்தியது.

 2007-2008-ல் சாதா ரகம் குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசு விலை ரூ.745 என நிர்ணயம் செய்தது; கழக அரசு ரூ.795 என உயர்த்தியது.

2008-2009-ல் சாதா ரகம் குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசு விலை ரூ.900 என நிர்ணயம் செய்தது; கழக அரசு ரூ.1,000 என உயர்த்தியது.

 2009-2010 மற்றும் 2010-2011-ல் மத்திய அரசு விலை 1,000 ரூபாய் என நிர்ணயம் செய்தது; கழக அரசு ரூபாய் 1,050 என உயர்த்தி வழங்கியது.


2005-2006-ல் அ.தி.மு.க. அரசு நெல்லுக்கு வழங்கிய கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூபாய் 600; கழக அரசு ஆண்டுக்காண்டு இதனை உயர்த்தி, 2009-2010-ல் சாதா ரக நெல் விலை 1,050 ரூபாய் என உயர்த்தி வழங்கி வருகிறது.


2006-2007-ல் சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசு விலை ரூ.610 என நிர்ணயம் செய்தது; கழக அரசு அதனை ரூ.650 என உயர்த்தியது. 2007-2008-ல் சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசு விலை ரூ.775 என நிர்ணயம் செய்தது; கழக அரசு ரூ.825 என உயர்த்தியது.

2009-2010-ல் 9.5 சத சர்க்கரை பிழிதிறன் உள்ள கரும்புக்கு மைய அரசு நியாய மற்றும் ஆதாய விலையாக 1,077 ரூபாய் 60 காசு என அறிவித்த போது கழக அரசு போக்குவரத்துக் கட்டணம் மற்றும் ஊக்கத் தொகை உட்பட டன் ஒன்றுக்கு 1,650 ரூபாய் என வழங்கியது.

பெரியாரின் பிறந்த நாளான 17.9.2006 அன்று திருவள்ளூரில் தொடங்கப்பட்ட நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச நிலம் வழங்கும் திட்டத்தின்கீழ் 1 லட்சத்து 78 ஆயிரத்து 796 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகள் குடும்பங்களுக்கு 2 லட்சத்து 12 ஆயிரத்து 853 ஏக்கர் நிலம் பண்படுத்தப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது;

 7 லட்சத்து 74 ஆயிரத்து 386 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.


உழவரும், நுகர்வோரும் பெரும்பயன் அடைந்திட 1999-ல் அறிமுகப் படுத்தப்பட்ட உழவர் சந்தைத் திட்டத்தின்கீழ் 2001 மே வரை 103 உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டு மக்களின் பாராட்டுகளை ஈர்த்தன; அதன்பின் வந்த அ.தி.மு.க. அரசு உழவர் சந்தைத் திட்டத்தைச் சீரழித்திட; 2006-ல் இந்த அரசு மீண்டும் பொறுப்பேற்றபின் அவற்றுக்குப் புதுப்பொலிவூட்டி நடைமுறைப்படுத்தியதுடன் புதிதாக மேலும் 50 உழவர் சந்தைகள் திறக்கப்பட்டு, தற்போது மொத்தம் 153 உழவர் சந்தைகள் சிறப்பாக இயங்கி வருகின்றன;
 விவசாயிகளும், பொதுமக்களும் பயனடைகின்றனர்.


விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில், மின்சாரம் விரயமாவதைத் தடுத்திட, சிறுகுறு விவசாயிகளுக்கு பழைய மின் மோட்டார்களுக்குப் பதிலாக இலவசமாக புதிய மின்மோட்டார்களும்; பெரிய விவசாயிகளின் பம்பு செட்டுகளில் உள்ள பழைய மின் மோட்டார்களுக்குப் பதிலாக 50 சதவீத மானியத்தில் புதிய மின் மோட்டார்களும், 5 ஆண்டுகளில் மாற்றி அமைக்கப்படும் என்றும் கடந்த சுதந்திர தின நாள் விழாவில் அறிவிக்கப்பட்டதை விரைந்து நிறைவேற்றிட ஆயத்தப் பணிகள் நடைபெறுகின்றன.

ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் பழைய பம்பு செட்டுகளுக்கு பதிலாக 50 சதவீத மானியத்தில் புதிய பம்பு செட்டுகள் வழங்கும் திட்டத்தில் 2006-ம் ஆண்டு முதல் 62 ஆயிரத்து 772 பழைய பம்பு செட்டுகளுக்கு பதிலாக புதிய பம்பு செட்டுகள் வாங்க 39 கோடியே 57 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2007-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நிலவிய வறட்சி மற்றும் டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவும், 2008-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தாலும், 5 லட்சத்து 95 ஆயிரம் ஏக்கர் நெற்பரப்பு பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக தேசிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 282 கோடியே 63 லட்சம் ரூபாய் இழப்பீடாகவும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின்கீழ் 213 கோடியே 80 லட்சம் ரூபாய் நிவாரணமாகவும், ஆக மொத்தம் 496 கோடியே 43 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

2007-08 ஆண்டை விட 2008-2009-ம் ஆண்டில் கூடுதலாக 2 லட்சத்து 93 ஆயிரம் ஏக்கரில் ராஜராஜன் 1000 தொழில்நுட்பத்தைப் பின்பற்றிய காரணத்தால் அரிசி உற்பத்தியில் பின்னடைவு ஏதுமில்லாமல் 51 லட்சத்து 83 ஆயிரம் மெட்ரிக் டன் பெற முடிந்தது. இயற்கை சீற்றத்தினால் கூடுதலான பரப்பு பாதிப்புக்கு உள்ளானபோதும் உற்பத்தி அதிகமாக பெற முடிந்தது.


ராஜராஜன் 1000 தொழில்நுட்பத்தினால் 30 முதல் 40 சதவீதம் மகசூல் அதிகரித்துள்ளதை உலக வங்கி நிதியின்கீழ் செயல்படுத்தப்படும் நீர்வள, நிலவளத் திட்டத்தின் குழு ஆய்வு அறிக்கை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராஜராஜன் 1000 திட்டத்தின்கீழ், இதுவரை 3 லட்சத்து 63 ஆயிரம் கோனோ களையெடுக்கும் கருவிகளும், 2 லட்சத்து 43 ஆயிரம் மார்க்கர்களும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார் கலைஞர்.

கலைஞர் அறிக்கை 2011

No comments:

Post a Comment