Sunday, 1 April 2018

மக்கள் எதிர்ப்பை மீறி பிஜேபியின் மார்ச் மாத மற்றும் கடந்தகால அறிவிப்புகள்

#வானதியின்_பொய்கள்

திரு ஸ்டாலின் 2011 இல்
Great Eastern Energy Corporation Limited (GEECL) என்ற கம்பெனிக்கு மட்டும் மன்னார்குடியில் மீத்தேன் ஆய்வுக்கு அனுமதித்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார்.
அந்த ஒப்பந்தத்தில் மக்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும் என்பது முக்கியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் எதிர்த்ததால் தற்போது அந்த திட்டமே கைவிடப்பட்டுவிட்டது. அந்த திட்டம் தவிர வேறு எந்த திட்டத்திற்கும் திரு.ஸ்டாலின் கையொப்பமிடவில்லை.

ஆனா வழக்கம் போல ஒட்டுமொத்த ஹைடிரோ கார்ப்பனுக்கும் திமுக அனுமதித்தது போல் பொய் பரப்புகிறர்.

1959 முதல் 105 ஆயில் கிணறுகள் ONGCயால் தோண்டப்பட்டுள்ளது

தமிழகத்தில் Oil  and natural gas எடுக்கும் பணி 1986 முதல் நரிமனம் , களப்பாள் ஆகிய இடங்களில் தொடங்கி 35 இடங்களில் நடந்து வருகிறது.


2014-15 க்கு மட்டுமே, தமிழக அரசுக்கு , ONGC மீத்தேன் எடுத்ததற்காக 300 கோடி ராயல்டி கொடுத்ததாவது  தெரியுமா?

இன்றைக்கும் தினமும் காவேரி படுகையில்3.8 மில்லியன் கியூபிக் மீட்டர் மீத்தேனும் 700 டன் ஆயிலும் ONGC யால் எடுக்கப்படுவதாவது தெரியுமா ?

இதெற்கெல்லாம் திமுகவா காரணம்?

கடந்தகாலங்களில் மீத்தேன் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு கிடையாது.
தற்போது மக்கள் எதிர்க்கிறார்கள்.

ஆனா BJP யோ கடந்தகால அனுமதிகளை காட்டி இன்று தமிழக மக்களுக்கு தான் செய்யும்
துரோகங்களை மூடிமறைக்க முயற்சிக்கிறது.

ஸ்டெர்லைட் தொடங்கப்பட்டபோது எந்த அளவிற்கு சுற்று சூழல் பாதிக்கும் என்பதை மக்களோ அரசோ உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

இன்று பாதிக்கப்பட்டோர் போராடுகிறார்கள். அதனால் ஸ்டாலின் உட்பட அனைவரும் ஸ்டெரிலைட்டை மூட ஆதரவு தருகிறார்கள். அதை தவறு என்று எப்படி சொல்லமுடியும்?

எந்த கட்சி எந்த திட்டம் கொண்டு வந்திருந்தாலும் மக்களுக்கு பாதிப்பு என்று கருதினால் தாங்கள் கொண்டு வந்த அனுமதித்த திட்டத்தை கைவிடுவதே ஒரு நல்ல கட்சிக்கு அழகு.

ஆனால் மத்திய அரசோ NEET ஐ தமிழக மக்கள் மீது திணித்தது போல மக்கள் விரும்பாத திட்டங்களை மேலும் மேலும் திணிக்கிறது.

#இதைத்தான்_திமுக_எதிர்க்கிறது

மக்கள் எதிர்ப்பை மீறி
பிஜேபியின் மார்ச் மாத மற்றும் கடந்தகால
அறிவிப்புகள்

1)தனியார் நிறுவனங்கள் மூலம் தமிழகத்தில் புதிதாக 24 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க BJP அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

2)நியூட்ரினோ திட்டத்திற்கு மார்ச் 2018 இல் பிஜேபி Ministry of Environment and Forests (MoEF) தானே environmental clearance வழங்கியிருக்கு.
மக்கள் எதிர்ப்பை மீறி
ஏன் வழங்கினீர்கள்?

3) தமிழகத்தில் 5 இடங்களில் பெட்ரோலிய மண்டலம்*
நெல்லை, எண்ணூர், சென்னை அருகே வல்லூர், ஆசனூர் மற்றும் தருமபுரி ஆகிய பகுதிகளில் பெட்ரோலிய எண்ணெய் மண்டலம் அமைக்க பரிந்துறை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

4)நெடுவாசல் திட்டம் தொடங்கப்பட்டு பிறகு கட்டுப்படியாகாது என காங்கிரஸ் அரசால் கைவிடப்பட்ட ஒன்று.

ஆனால் தற்போதைய BJP ஆட்சியில்தான் 2015 செப்டம்பரில்தான் நெடுவாசல் உட்பட 69 இடங்களில் Discovered Small Fields Policy திட்டத்தின் கீழ் ஹைடிரோ கார்பன் எடுக்க மத்திய பிஜேபி மந்திரிசபை முடிவெடுத்தது. 

Thursday, 29 March 2018

கலைஞர் & திமுக யோக்கியமா? அவர்கள் சம்பாதிக்கவில்லையா? எனக் கேட்கிறார்கள்

கலைஞர் & திமுக யோக்கியமா?
அவர்கள் சம்பாதிக்கவில்லையா? எனக் கேட்கிறார்கள்

1) கலைஞர் ஆட்சி 19 வருடம்தான்
MGR மற்றும் ஜெயலலிதா ஆட்சி 12 + 17 = 29 வருடம் நடந்திருக்கு.
அத்தனை அடாவடித்தனமும் சர்வாதிகாரமும் பழிவாங்கல்களும் நடந்திருக்கு.
கேவலம் ஒரு FIR கூட கலைஞர் மேல் போடமுடியவில்லையே
ஏன்?

2) ஏறத்தாழ 13 வருசம் இந்திராவை எதிர்த்துதான் கலைஞர் அரசியல் செய்தார். இடையிலே எமர்ஜென்சி வேறு.
இந்திராவிற்கு சிறிய ஆதாரம் கிடைத்திருந்தால் அப்போதே
எமர்ஜென்சியை எதிர்த்த கலைஞரை இருந்த இடம் தெரியாமல் செய்திருப்பாரே.
ஏன் வெட்டியா சர்க்காரியா கமிசன் போடனும்?

3) ஜெயாவுக்கு எதிராய் ஆதாரபூர்வமாக சொத்துக்குவிப்பு வழக்கை போட்டு, இருபது ஆண்டுகாலம் விடாது நடத்தி, உச்ச நீதிமன்றம் மூலம் இறுதி தீர்ப்பையும் பெற்று, ஜெயலலிதா ஒரு ஊழல் குற்றவாளி என நிரூபித்ததை போல கலைஞர் மேலும்
வழக்கு போட்டிருக்க வேண்டியதுதானே
ஏன் போடமுடியல?

46 ஊழல் வழக்குகள் தொடுக்கப்பட்ட ஒரே முதல்வர் ஜெயாதான்.
இருமுறை முதல்வர் பதவியிலிருந்து ஊழலுக்காக தண்டிக்கப்பட்டு கீழே இறங்கியவரும் ஜெயாதான்

கலைஞரால் நிம்மதியின்றி 20 வருடம் வாழ்க்கை நடத்திய ஜெயலலிதாவிற்கு கலைஞர் ஊழல் செய்தார் என சிறு துரும்பு
ஆதாரம் கிடைத்திருந்தாலும் அதை தூணாக மாற்றி கலைஞரை பழிவாங்கியிருக்கமாட்டாரா ஜெயலலிதா?

இதையெல்லாம் சொன்னால் எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்காத சர்க்காரியா சயின்டிபிக் ஊழல் என்று சொன்னாதாக இவனுங்களா கதை விடுவானுங்க.

சயின்ஸ் என்றாலே சோதனையில் நிரூபிக்கக் கூடிய ஒன்று என்றே அர்த்தம். சயின்டிபிக் ஊழல் என்றால் சோதனையின் மூலம் நிரூபிக்க வேண்டியதுதானே.
ஏன் முடியல?

குப்பிற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலை கதைதான்.

கலைஞரே தனக்கு சொத்து வந்த கதையை விளக்கியிருக்கிறார்
http://antonyparimalam.blogspot.in/2017/07/blog-post_3.html?m=1


இதை படித்து அறிவை வளர்த்துங்க மூடர்களே

By A.Parimalam / The News man

Sunday, 4 March 2018

ஈழப்போரும் திமுகவும்*** எழுப்பப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும்

ஈழப்போரும் திமுகவும்***

எழுப்பப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும்

டெல்லியில் சொந்த மகளை வெறும் விசாரணை கைதியாக அநியாயமாக சாட்சியங்களை கலைத்து விடுவார் எனச் சொல்லி சொல்லியே ஜெயிலில் 6 மாதங்களாக வைத்திருந்தார்களே ஒரு முதல்வராக இருந்த கலைஞரால்  தடுக்க முடியலையே ஏன்? சொந்த நாட்டில் சொந்த மகளுக்கு ஏற்பட்ட அநீதியையே தடுக்கமுடியாத கலைஞரால் ஈழத்தில் நடந்த போரை எப்படி நிறுத்தியிருக்க முடியும்?

(1)கேள்வி :- கலைஞரால் சோனியாவிடம் பிரபாகரனை காப்பற்றுமாறு கோரமுடியுமா?

ராஜீவ் கொலையில திமுகவின் மீதும் களங்கம் சுமத்தப்பட்டது அதையும் மீறிதான் சோனியா திமுகவுடன் உறவு வைத்துக்கொண்டார்

ராஜீவை கொன்றது LTTE தான் என்பது உறுதியில்லை எனினும்
தன் கணவன் இறப்பிற்கு பிரபாகரன்தான் காரணம் என நம்பும் சோனியாவிடமே போய் பிரபாகரனை காப்பாற்று என கலைஞர் கேட்கமுடியுமா?

(2) கேள்வி:- கலைஞர் சொன்னா இந்திய அரசு கேட்டு போரை நிறுத்தி இருக்குமா?

பதில் :- 2008 வாக்கிலேயே திமுக மேல் காங்கிரஸ் தலைவர்களுக்கு கசப்புணர்வு மேலோங்கிவிட்டது.  2009 ல் காங்கிரசுடன்  அதிமுக கூட்டணி வைக்க பல்வேறு தூதுவர்களை சோனியாவுக்கு அனுப்பிக் கொண்டிருந்த நேரம் அது. இலங்கை பிரட்சினைக்காக திமுக ஆதரவை விலக்கினால் ஆதரவளிக்க தயார் என முலாயம்சிங் வெளிப்படையாகவே அறிவித்தார்.

மேலும் காங்கிரசுக்கு தானும் ஆதரவளிப்பதாக ஜெயலலிதா தன் பங்கிற்கு காங்கிரஸ் கட்சிக்கு தூதுவிட்டார்.

2009 ஆரம்பத்தில் திமுகவை கழற்றி விடும் நோக்கத்தில்தான் காங்கிரஸ் தலைவர்கள் இருந்தனர்.

எனவே திமுக என்ன செய்திருந்தாலும் அது காங்கிரஸ் காதில்
விழுந்திருக்காது என்பதே உண்மை.

2008 இல் கூட காங்கிரஸ் திமுக ஆதரவை நம்பி இல்லை. மத்தியில் ஆதரவை விலக்கியிருந்தால் ஒன்றும் நடந்திருக்காது.


(3)கேள்வி :-திமுக எம்பிக்கள் ஏன் ராஜினாமா செய்யவில்லை?

பதில் :-இலங்கையில் உச்சகட்ட ஈழப்போர் நடந்தது ஏப்ரல்,மே 2009 மாதங்களில்தான் மே 18ல் போர் முடிந்துவிட்டது

அதே சமயம் இந்தியாவில் 15வது லோக்சபா தேர்தல் 5 கட்டங்களாக 16 ஏப்ரல் 2009 to 13 மே 2009 வரை நடந்தது

மன்மோகன் பதவியேற்பு 22 மே 2009

பதவியே முடியும் நேரத்தில் திமுக MPக்கள் ராஜினாமா செய்ய அவசியமே இல்லையே.

(4) கேள்வி :- திமுக ஆட்சியை ராஜினாமா ஏன் செய்யவில்லை?

பதில் :-2009 இல் கலைஞர் தன் அரசை ராஜினாமா செய்திருக்கலாம். அதனால் மீண்டும் தேர்தல் வந்து நீங்களெல்லாம் ஈழத்தாய்க்கு ஓட்டு போட்டு மீண்டும் ஈழத்தாய் அப்போதே ஆட்சிக்கு வந்திருக்கும். அதை தவிர வேற எதுவும் நடந்திருக்காது.

போரின் போது நீங்கள் சொல்வது போல ராஜினாமா செய்திருந்தால் மீண்டும் ஜெயா ஆட்சிக்கு வந்திருப்பார். அது சரி கலைஞர் அரசு எத்தனை முறை ஈழப்பிரட்சினையால் பதவி இழப்பது?

திமுக ஈழத்தமிழர்களுக்கு சாதகமாக நடந்து ராஜீவ் கொலை பழி வரை சுமந்ததே அதற்கு யார் என்ன நன்றி காண்பித்தார்கள்?


(5)கேள்வி :- என்ன செய்திருந்தா ஈழப்போரை நிறுத்தியிருக்கலாம்?

பதில் :-என்ன செய்திருந்தாலும் யாராலும் போரை நிறுத்தி இருக்க முடியாது.

தனது நெடுங்கால எதிரியை ஒழித்துக்கட்ட கிடைத்த சந்தர்ப்பத்தை இழக்க சிங்கள ராணுவமோ ராஜபக்சேவோ தயாரில்லை.

உச்சக்கட்ட போரின்போது சிங்கள வீரர்களை அச்சமயம் ராஜபக்சேவால் கூட கட்டுப்படுத்தியிருக்க முடியாது.

அத்தனை பெரிய இழப்புகளை சிங்களப்படை சந்தித்துள்ளது.

இந்தியாவோ, UNO வோ, அமெரிக்காவோ
யார் நினைத்திருந்தாலும் போரை நிறுத்தியிருக்க வழியில்லை

(6) கேள்வி :- திமுகவை கேள்வி கேட்க யாருக்கு யோக்கியதை
உள்ளது?

ஈழத் தமிழர்கள் விசயத்தில் திமுகவை குறை கூறுவோர்
தங்கள் கட்சி ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்தது என்பதை சொல்லிவிட்டு அல்லவா குறை சொல்லனும்

தமிழ்நாட்டில் மல்லாக்க படுத்துகிட்டு சிங்களனை திட்டி அவனுக்கு வெறியேற்றியதும்
வெளிநாடு தமிழர்களிடம் பணம் வசூலிச்சதும்தானே நீங்க செஞ்ச ஈழப்பணி😁

கலைஞர் 85 வயதில் 1/2 நாள் உண்ணாவிரதம் இருந்து எதிர்ப்பை காட்டினார். ஆனால் அதை கூட செய்யாத தமிழ் தேசியவாதிகளுக்கு கலைஞரை நோக்கி கைக்காட்ட. குறைசொல்ல என்னடா யோக்கியதை இருக்கிறது?

அப்போது நீங்கள் செய்தது மிகச்சிறந்த உள்நாட்டு வெளிநாட்டு வசூல் வேட்டைதானே.


பிரபாகரன் தந்த கடைசி Interview இது.

https://m.rediff.com/news/2008/oct/26ltte2.htm

இதிலும் ஜெயாவை பிரபாகரன் விமர்சித்துள்ளார்

விலகியிருப்பினும் கலைஞர் எந்த சூழலிலும் பிரபாகரனை தவறாக பேசியதில்லை. அவ்வாறே பிரபாகரனும் கலைஞரை விமர்சித்ததில்லை

டேய் கேணப்பசங்களா ....ராஜீவ் காந்தி இறந்த போது உடமைகளை இழந்து அடியும் உதையும் வாங்கி இழப்பை சந்தித்ததது நாம்தமிழர் , பாமக,  அதிமுக கட்சியினர் இல்லடா... திமுககாரன்தான்டா.

அதைவிட பெரிய தியாகத்தை எவனும் செய்ததில்லை.











Wednesday, 6 December 2017

69% இட ஒதுக்கீட்டில் ஜெ உண்மையில் அக்கறை காட்டினாரா? அக்கறை காட்ட வைத்தவர் கலைஞருங்க.

உண்மை என்னவென்றால் 69 சதவீத இடஒதுக்கீட்டில் ஜெய‌ல‌லிதா தானாக அக்கறை காட்டவில்லை அவரை அந்த நிலைப்பாட்டை எடுக்க வைத்தது கலைஞர்தான்.
இடஒதுக்கீடு 69சதவீதம் என்பதற்கு மாறாக 50சதவீத அளவுக்கு மட்டுமே செல்லும் என உச்சநீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியது.
இதன்விளைவாகத்  தொழிற்கல்விகளில் 69சதவீத அளவுக்கு இடங்களை ஒதுக்குவது குறித்த போராட்டம்  மாணவர்கள்   மத்தியில்  பெரிதாக எழுந்தது.
இடஒதுக்கீடு எத்தனை சதவீதம் என்பதை நிர்ணயிக்கும் உரிமையை அந்தந்த மாநில அரசுகளுக்கே வழங்கும் வகையில்  அரசியல்  சட்டத்தில் திருத்தம்  கொண்டு வரவேண்டும் என முதலில் குரல் எழுப்பியது திமுகதான்.
இடஒதுக்கீடு பிரச்சனையில்  ஜெயலலிதா அரசு அப்போது இரட்டைவேடம் போடுவதைப் போல ஒரு கருத்து பத்திரிகையாளர்கள் மத்தியில் இருந்தது.
இதற்குக்  காரணம், 1993இல் உச்சநீதிமன்றத்தில் அளித்த ஒப்புதல் பிரமாணப்பத்திரத்தில் , நீதிமன்றத்தின்  தீர்ப்பையேற்று தமிழகத்தில் 1993-1994 ஆம்ஆண்டுக்கு 50சதவீத இடஒதுக்கீடு வழங்க அதிமுக அரசின் சார்பில் சம்மதம் கொடுத்ததுதான்.
இதனால் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படும் நேரத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50சதவீத இடஒதுக்கீடுதான் என அறிவிக்கப்படும் நிலை ஏற்பட்டது
இடஒதுக்கீட்டை நீட்டிக்கச் செய்ய அரசியல் அமைப்புச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் எனவும், இடஒதுக்கீட்டின் அளவு எவ்வளவு என்பதை உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில் மாநில அரசே முடிவெடுக்க வழி செய்யும் வகையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் உடனடியாகக்கூட்டி, அரசியல்  சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற ஆதரவு அளிக்கக்கோரி கலைஞர் வலியுறுத்தினார்.
அரசியல் சட்டத்தைத் திருத்த ஆதரவு  கேட்டு முன்னாள் பிரதமர்வி.பி.சிங், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் என்.டி.ராமராவ், அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பா.ஜ.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு அப்போது கடிதம் எழுதினார் கலைஞர்.
அந்தக்கடிதங்களுக்கு பா.ஜ.கதலைவர் வாஜ்பாய், வி.பி.சிங், இந்திரஜித்குப்தா, ஜார்ஜ்பெர்னாண்டஸ், ஹர்கிஷண்சிங்சுர்ஜித், சுப்பிரமணியசுவாமி ஆகியோர் ஆதரவு தெரிவித்து கடிதங்களை அனுப்பினர்.
இடஒதுக்கீடுபிரச்சனைக்காக 1994 இல் தி.மு.க உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் மத்திய -மாநிலஅரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் நடத்தப் போவதாக அறிவித்தன. 
அப்போது அதேநாளில் பந்த் நடத்தப் போவதாக ஜெயலலிதா அறிவித்தார்.
இதனால்,எதிர்க்கட்சியினர் தங்களது மறியல் போராட்டத்தை ஒத்திவைத்தனர். அதற்கும்  ஜெ அரசு அனுமதி மறுத்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைதுசெய்து காவ‌ல்துறை பின்னர் விடுவித்தது.
இடஒதுக்கீட்டுப் பிரச்சனையில் தி.மு.க. காட்டிய அக்கறை குறித்தும், அப்போதைய அ.தி.மு.கஅரசு நடந்து கொண்டவிதம் பற்றியும் பத்திரிகைகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.

திமுக ஏற்படுத்திய நிர்ப்பந்தகளாலும் அழுத்தத்தாலுமே முதலில் உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொண்ட  ஜெ பின்பு வேறு வழியின்றி 69% இட ஒதுக்கீட்டிற்கு ஏற்பாடு செய்தார்.

Friday, 10 November 2017

மின் வெட்டுக்கு திமுகவா காரணம்? வீண் பழி சுமந்த திமுக**

மின் வெட்டுக்கு திமுகவா காரணம்?
வீண் பழி சுமந்த திமுக**
ADMK Govt's lack of initiatives to set up new power projects during their regime( 2001-06 ) was the main reason for the power crisis in the State during the DMK regime from 2006-2011.
DMK Government allotted fund to establish 11 new power generation projects during 1996-2001 to generate 1,200 MW of electricity.
This saved the State from power crisis from 2001 to 2006.
But the AIADMK did not invest on any such project 2001-06 five years. This hit the people badly when the DMK was back in power from 2006-2011.
Moreover  Dmk govt attracted a lot of investments for setting up industries for generating new employment opportunities. But, there was no adequate electricity generation to support their needs and this resulted in severe power crisis.
From 2006 to 2011 DMK initiated a host of power projects such as the 600 MW plant at Rs. 3,136 in Ennore, the Rs. 2,475-crore 600 MW thermal power plant in North Chennai, the 800 MW plant at Udankudi at an investment of Rs. 8,362 crore, a 600 MW power plant in Mettur and 183 MW generation through cooperative sugar mills.

All the above projects were expected to be completed by 2013-15 and put an end to power crisis though Dmk were not in power.

Monday, 30 October 2017

கலைஞர் எப்போது ஊழல்வாதியானார்?

"என்னய்யா இந்த அதிமுக இப்படி ஊழல் பண்ணுதேன்னு கேட்டால்"

"ஆமா கலைஞர் மட்டும் யோக்கியமா" அப்படீன்னு பதில் வரும்.

இதற்கு என்ன அர்த்தம்?
அதிமுக என்ன ஊழல் செஞ்சாலும் யாரும் கேட்க கூடாதுன்னு அர்த்தமா?

உண்மையில் அப்படித்தான் பொது மக்களுக்கே ஒரு எண்ணம் வந்துவிட்டது.

"அது சரி ..கலைஞர் எப்ப ஊழல்வாதியானார்" எனக் கேட்டா
"அதான் சர்க்காரியா கமிசன் போட்டாங்களே" என பதில் வரும்.

"சர்க்காரியா கமிசன் அறிக்கையில் சொல்லப்பட்ட சில குற்றச்சாட்டுகள் மீது விசாரணை செய்து 10 வருசம் கழித்து எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் குப்பையில் போட்டதும் தெரியுமா"
எனக் கேட்டால் அதற்கு " அதான் சயின்டிபிக் ஊழல்னு சர்க்காரியாவே சொல்லிட்டாரே" என பதில் வரும்.

" சயின்டிபிக் என்றால் சோதனையில் நிரூபிக்கக் கூடியது என்றுதானே அர்த்தம். கலைஞரின் ஊழல்களை நிரூபிக்க வேண்டியதுதானே" எனக் கேட்டால் பதிலே வராது.

" சரி Ok.. 1989-91 ,1996-2001 இல் கலைஞர் மீது எந்தக் குற்றச்சாட்டும் யாரும் சொல்லவில்லையே ஏன் மீண்டும் கலைஞருக்கு வாய்ப்பு வழங்காமல் 1991-96 இல் ஊழலுக்கு ஆளான அதிமுகவையை தேர்ந்தெடுத்தீர்கள்.?

உங்களுக்கு ஊழல் ஒரு பொருட்டே இல்லை என்றுதானே அர்த்தம்.

"பிறகு ஏன் மீண்டும் மீண்டும் 45 வருடங்களுக்கு முன்பு நடந்ததாக சொல்லப்பட்டு நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டை சொல்லி சொல்லி இன்றும் கலைஞரை ஊழல்வாதி என்கிறீர்கள் " எனக் கேட்டால் மீண்டும் சர்க்காரியா என ஆரம்பித்து கீறல் விழுந்த ரிகார்டு மாதிரி பேச ஆரம்பித்து விடுவார்கள்.

2G வழக்கிலும் ராசா மற்றும் கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளுக்கு CBI முறையான ஆதாரத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை என்பது ஊரறிந்த விசயம். தீர்ப்பு ராசாவிற்கு எதிராக வந்தாலும் கூட ராசா மேல்முறையீட்டால் நிச்சயம் விடுவிக்கப்படுவார்.

"1969-1972 வரையிலான காலத்தில் நடந்ததாக MGR கொடுத்த ஆதரமற்ற ஊழல் பட்டியலைத்தானே சொல்றீங்க. அதை மட்டுமே சொல்லி1977-1989 1991-96,2001-06, 2011-17 என எல்லா ஆட்சியிலும் தொடர்ந்து அதிமுக ஊழல் பண்ணுவது சரியா" எனக் கேட்டா சரியான பதிலே வராது.

"ஆட்சியில் இருந்தவனுங்களுக்கு ஊழல் மூலம் பணம் வந்திருக்கலாம். ஆனா கட்சி ஆரம்பிச்சி ஒரு முறை கூட ஆட்சிக்கே வராத சிறு கட்சிக்காரன் எல்லாம் வைத்திருக்கும் கோடிக்கனக்கான பணம் எங்கிருந்து வந்தது.? ஆட்சிக்கே வராம கோடிகளில் புரளும் அவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்தால் தமிழகம் என்ன ஆகும்?" எனக் கேட்டால் கெட்டவார்த்தையால் ஆபாசமா திட்டுவானுங்க.

ஊழல் ஊழல் என்று சொல்லிக் கொண்டே தொடர்ந்து அதிமுகவிற்கே பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டளித்த மக்களுக்கு ஊழல் பற்றி பேசவோ மற்றவர்களை கை காட்டவோ யோக்கியதை இல்லை.

முதுகில் முன்னூறு ஊழல்களை சுமந்துக் கொண்டு கலைஞரை ஊழல்வாதி என்கின்றனர் ஊழல்வாதிகள்.

திமுகவினர் மட்டுமின்றி மற்ற அனைத்து கட்சியிருக்கு மேலே சொல்லப்பட்ட உண்மைகள் புரியும்.
ஆனால் புரியாதது போல
ஊரை ஏமாற்ற நடிக்கிறார்கள்.

Wednesday, 11 October 2017

BJP ஆட்சி வந்தது முதல் இந்திய வங்கிகள் மிகப்பெரிய அழிவை சந்தித்துக் கொண்டுள்ளது.




BJP ஆட்சி வந்தது முதல் இந்திய வங்கிகள் மிகப்பெரிய அழிவை சந்தித்துக் கொண்டுள்ளது.
ஆண்டாண்டிற்கு வாராக் கடன் தள்ளுபடி கற்பனை பண்ண இயலாத அளவு எகிறிவிட்டது ஏன்?
பல லட்சம் கோடிகள் எந்த அடிப்படையில் வாராக்கடன்கள் ஆனது?

ஏன் வங்கிகள் மிகப்பெரிய தொகைகளை உரிய சொத்துக்களை அடமானம் பெறாமல் வழங்கின?

காங்கிரஸ் ஆட்சியில் மிகக் குறைவாக இருந்த வாராக்கடன்கள் BJP ஆட்சியில் பல நூறு சதவீதம் பெருகுவது ஏன்?

எல்லாம் புரியாத புதிர்கள்.

2012 மார்ச் இறுதியில் இந்திய வங்கிகளின் வாராக்கடன் Rs 15,551 crore மட்டுமே.

2004 முதல்2015 வரை 11 ஆண்டுகளுக்கு வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்ட மொத்த  கடன் சுமார்  Rs 2.11 லட்சம் கோடிகளே.

அந்த 2.11லட்சம் கோடிகளில் 2013-14 மற்றும்
2014- 2015 வரையிலான இரண்டாண்டுகளில் மட்டுமே  Rs 1,14,182 கோடிகள்
கடன் வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அதாவது 2004 முதல் 2012 வரை
வங்கிகளின் வாராக்கடன் சதவீதம்  4 % மட்டுமே.


ஆனால் 2013 முதல் 60% எனவும் 2015 இல் 85% எனவும் கடுமையாக உயர்ந்து விட்டது.

வங்கிகளின் கடன் தள்ளுபடி
2012-13.    27231 கோடிகள்
2013-14.    34409
2014-15.    49018
2015-16.    57586
2016-17.    81683

வங்கிகளால் வாராக்கடன் 2015-16 க்குRs 57,586 crore தள்ளுபடி .

அதே வங்கிகளின் வாராக்கடன் 2016-17 க்கு மட்டுமே  Rs 81,683 crore.

வங்கிகளின் மொத்த நிகர லாபம்

2012-13.         45849 கோடிகள்
2013-14.         31513  
2014-15.         30868
2015-16.    ( -)20003 ( நஷ்டம்)
2016-17.             474

எப்படியிருந்த வங்கிகள் இப்படி ஆயிட்டே !!!
என உண்மையில் வருத்தமாகவுள்ளது.

In contrast to the write off amount of Rs 27,231 crore in 2012-13, when banks earned combined net profit of Rs 45,849 crore, the amount of loans written off in 2016-17 trebled to Rs 81,683 crore and the banks combined profits were a Rs 474 crore. Banks have written off a total of Rs 2.46 lakh crore worth of loans in the last five years, the finance ministry data show.

In the past couple of years, PSBs incurred combined net losses of over Rs 19,529 crore, even as the government capital infusion during these two years, at Rs 47,915 crore, was the highest in the last decade. The gross NPA of banks has risen to 9.6 per cent (of total advances) in March 2017, from 9.2 per cent in September 2016, as per the RBI data. The stressed advances ratio declined marginally from 12.3 per cent to 12 per cent due to fall in restructured standard advances, especially in agriculture, services and retail sectors, the data showed


The Reserve Bank of India (RBI) on Thursday announced that it will transfer Rs 30,659 crore as surplus to the government for the year ended June 2017, less than half the amount transferred last year.

For the year 2015-16, the RBI board had approved the transfer of surplus amounting to Rs 65,876 crore to the government. In the previous year 2014-15, the Central bank had paid Rs 65,896 crore to the government, which came as a boon to the government in covering the deficit. The surplus transferred to the government was Rs 52,679 crore in 2013-14. The RBI did not give reasons of the sharp fall in the surplus income for the year ended June 2017.


Despite a series of steps to contain non-performing assets (NPAs), public sector banks (PSBs) wrote off a record Rs 81,683 crore worth of bad loans in the financial year ended March 2017, a jump of more than 41 per cent over the previous year’s write-off amount of Rs 57,586 crore, as per the finance ministry data.

As per a recent analysis by rating agency Crisil, banks are likely to take a haircut of 60 per cent, worth Rs 2.40 lakh crore, to settle 50 large stressed assets with debt of Rs 4 lakh crore.


Even as the government has been trying to shore up public sector banks through equity capital and other measures, bad loans written off by them between 2004 and 2015 amount to more than Rs 2.11 lakh crore. More than half such loans (Rs 1,14,182 crore) have been waived off between 2013 and 2015

In other words, while bad loans of public-sector banks grew at a rate of 4 per cent between 2004 and 2012, in financial years 2013 to 2015, they rose at almost 60 per cent. The bad debts written off in financial year ending March 2015 make up 85 per cent of such loans since 2013.

  Taking suo motu cognizance of The Indian Express report that Rs 1.14 lakh crore of bad loans had been written off by state-owned banks between 2013 and 2015, the Supreme Court Tuesday ordered the Reserve Bank of India (RBI) to share with it names of all defaulters who owe over Rs 500 crore and continue to lead “lavish lifestyle”.

“People are owing thousands of crore to the public banks… it is a big fraud. Top ten public sector banks have written off Rs 40,000 crore alone in 2015.
Defaulters owe 27% of total amount to SBI alone, PNB nextNon-performing assets: Govt-run banks write off record Rs 81,683-crore bad loans in FY17RBI refuses to disclose list of loan defaulters

On February 9, The Indian Express reported that a RTI response from the RBI revealed that while bad loans stood at Rs 15,551 crore for the financial year ending March 2012, they shot up over three times to Rs 52,542 crore by the end of March 2015.

http://indianexpress.com/article/business/banking-and-finance/rbis-dividend-to-government-falls-by-almost-half-to-rs-30659-crore-4791420/

http://indianexpress.com/article/business/business-others/non-performing-assets-govt-run-banks-write-off-record-81683-crore-bad-loans-in-fy17-4785497/