Tuesday 11 July 2017

இன்னைக்கு நேத்தாடா மீத்தேன் எடுக்குறான்? 1986 இல் இருந்து தமிழ்நாட்டில் மீத்தேன் எடுக்குறான் ONGC காரன்.

இன்னைக்கு நேத்தாடா மீத்தேன் எடுக்குறான்? 1986 இல் இருந்து தமிழ்நாட்டில் மீத்தேன் எடுக்குறான் ONGC காரன்.

இவனுங்க என்னோமோ
தமிழகத்தில் மீத்தேன் எடுக்கிற வேலை இன்னைக்கு தொடங்கியது மாதிரியே பேசுறானுங்க பிராடு பசங்க.

மீத்தேன் என்பது Natural gas இல் 75% உள்ள CH4 hydro carbon ஆகும்.

தமிழகத்தில் Oil  and natural gas எடுக்கும் பணி 1986 முதல் நரிமனம் , களப்பாள் ஆகிய இடங்களில் தொடங்கி 35 இடங்களில் நடந்து வருகிறது.

 அதற்கு முன் 1977 வாக்கிலேயே   ஆய்வு பணிஆரம்பிச்சாச்சி. அப்போது MGR ஆட்சிதானே நடந்தது. முதன்முதலில் மீத்தேன் எடுக்க அனுமதி தந்ததே MGR தானேடா.

1977 இல் இருந்து 2017 வரை அதிமுக 29 வருசம் ஆட்சியில் இருந்துள்ளது. திமுக 12 வருடமே ஆட்சியில் இருந்துள்ளது.

இந்த 41 வருட காலத்தில்தான் 35 இடங்களில் கிணறுகள் தோண்ட அனுமதிக்கப்பட்டு மீத்தேன்  எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த 35 கிணறுகளுக்கும் திரு ஸ்டாலினா அனுமதி தந்தார்.?

உண்மை என்னவென்றால் அவர் ஒரு கிணறுக்குமே அனுமதி தந்ததில்லை.

1985 லேயிருந்து இவ்வாறு எடுக்கப்படும் குரூட்ஆயில் மற்றும் இயற்கை வாயுக்களுக்கு ஆண்டுதோறும் ONGC தமிழக அரசிற்கு ராயல்டியும் வாட் வரியும் செலுத்துகிறது என்பதாவது தெரியுமா மடையர்களே.?

2014-15 க்கு மட்டுமே, தமிழக அரசுக்கு , ONGC மீத்தேன் எடுத்ததற்காக 300 கோடி ராயல்டி கொடுத்ததாவது எவனுக்காவது தெரியுமா?

இன்றைக்கும் தினமும் காவேரி படுகையில்3.8 மில்லியன் கியூபிக் மீட்டர் மீத்தேனும் 700 டன் ஆயிலும் ONGC யால் எடுக்கப்படுவதாவது தெரியுமா மரமண்டைகளே ?

மன்னார்குடி பகுதியில் #மீத்தேன்ஆய்வுக்குதான் திரு ஸ்டாலின் அனுமதி வழங்கினார். #மீத்தேன்எடுப்பதற்கு அல்ல. தற்போது அனுமதி வழங்கப்பட்ட அந்த கம்பெனியே ஒதுங்கிக்கொண்டது. இது முடிந்து போன கதை.

 இப்படி  மீத்தேன் ஆய்வுக்கு வழங்கிய  அனுமதியை அப்படியே திரித்து மீத்தேன் ஆய்வு செய்ய இப்போதுதான் முதன் முறையாக அனுமதி கொடுத்ததாக ஒரு மிகப்பெரிய பொய்யை அவிழ்த்துவிட்டு  அப்பாவி இளைஞர்கள் மனதில் நஞ்சை
விதைக்கின்றனர் அயோக்கிய அரசியல்வாதிகள்.

திமுகவின் பிச்சையால் 5 வருடம் MPயாக மத்திய மந்திரியாக இருந்த அன்புமணி காவேரி டெல்டாவில் கடந்த 41 ஆண்டுகளாக ONGC யால் இயற்கைவாயு எடுக்கப்படுவதை ஒருமுறையாவது எதிர்த்தாரா?
ஏன் எதிர்க்கவில்லை?

நெடுவாசலுக்கு பின்தானே உங்க எல்லோருக்கும் ஞானதோயமே வந்தது?  அதற்கு முன் ஏன்டா கடந்த 40 வருசமா எவனுமே போராடல?

நாற்பது வருசமா குறட்டை விட்டு தூங்குவானுங்களாம். திடீரென விழிச்சிகிட்டு திமுக மேலேயும் திரு. ஸ்டாலின் மேலேயும் பழி போட்டு இவனுங்க எல்லாம் புனிதர் ஆயிடுவானுங்களாம்.

போங்கடா ...போய் இனிமேல் ஆக வேண்டியதை பாருங்கடா.


C N S Kumar, deputy general manager incharge of ONGC's corporate communications, told TOI, adding that the firm produces 700 tons of oil and extracts 3.8 million cubic metres of natural gas per day . "Last financial year 2014-15 alone we contributed `300 as royalty and `110 crore as VAT to Tamil Nadu government," he said.

By Antony Parimalam

MOU அப்படீன்னா என்ன?
இது வெறும் ஆரம்ப நிலை. அதாவது சாதாரண புரிந்துணர்வு ஒப்பந்தம்.  தமிழக அரசால் இது மாதிரி ஆயிரக்கணக்கில் ஒப்பந்தம்  போடப்பட்டு தூங்கிட்டு இருக்கு.
GEECL proposed to invest Rs.100 crore initially for the exploration activity and once the commercial viability and feasibility was established, it would further invest Rs.3500 crore on production of CBM.
இந்த ஒப்பந்தம் GEECL யுடன் 2011 ஜனவரியில் போடப்பட்டது. இதில் 100 கோடி செலவில் ஆய்வுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது.
அதாவது Exploration பணிக்கு மட்டுமே.
எண்ணை கிடைத்தால் மேலும் 3500 கோடி முதலீடு செய்யப்படும் என்றே சொல்லப்பட்டுள்ளது.

மக்கள் எதிர்ப்பால் இந்த ஆய்வு பணியே தற்போது நிறுத்தப்பட்டு விட்டுவிட்டது.

நிச்சயம்தான் நடந்தது. ஆனா கல்யாணம் நடந்து புள்ளையே பெற்றதாக பேசிகிட்டு திரியாதீங்க

மேலும் அந்த ஒப்பந்தத்தில் மக்களிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிர்பந்தம் உள்ளதை மறந்து பேசக் கூடாது

எனவே ஆய்வுக்கு தந்த அனுமதியை மீத்தேன் எடுக்க தந்த அனுமதியாக திரிக்கக் கூடாது

No comments:

Post a Comment