Friday 21 July 2017

ஹைடிரோ கார்ப்பன் திட்ட பொய் பரப்புரைகளும் அதற்கான உண்மை விபரங்களும்

இணையத்தில் சில திருட்டு பசங்க தழிழகத்தில் ஒரு மெகா பொய்யை கீழ்கண்ட கேள்வி பதிலை எழுப்பி பொய்யை பரப்பி வருகிறார்கள்.
அவருடைய கேள்விகளுக்கும் அவர்களே தந்த பதில்களுக்கும் நமது பதில்கள் தரப்பட்டள்ளது.

*************************************
1)கேள்வி =- இந்த நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எப்ப தொடங்கினாங்க?
பதில்= 1996 இல்
கேள்வி = -அப்ப யார் ஆலங்குடி எம்எல்ஏவா இருந்தா
பதில் = -ராஜசேகர்
கேள்வி= -அவர் எந்தகட்சி?
பதில் =- கம்யூனிஸ்ட் கட்சி.
*************************************நமது பதில் *

நெடுவாசல் திட்டம் தொடங்கப்பட்டு பிறகு கட்டுப்படியாகாது என காங்கிரஸ் அரசால் கைவிடப்பட்ட ஒன்று.
ஆனால் தற்போதைய BJP ஆட்சியில்தான் 2015 செப்டம்பரில்தான் நெடுவாசல் உட்பட 69 இடங்களில் Discovered Small Fields Policy திட்டத்தின் கீழ் ஹைடிரோ கார்பன் எடுக்க மத்திய பிஜேபி மந்திரிசபை முடிவெடுத்தது. அப்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சி இருந்தது.

சாதாரண MLA  இதை தடுக்க வாய்ப்பேயில்லை.

-------------------------------------------------
2)  கேள்வி =-ஆலங்குடி எந்த பாரளுமன்ற தொகுதிக்குட்பட்டது
பதில் = - சிவகங்கை தொகுதி
கேள்வி =சிவகங்கை தொகுதி எம்பியா அப்ப இருந்தது யாரு?
பதில் = சிதம்பரம்
கேள்வி= அவர் எந்த கட்சி?
பதில் = காங்கிரஸ்
-------------------------------------------------
நமது பதில்*
Discovered Small Fields Policy திட்டத்தின் கீழ் ஹைடிரோ கார்பன் எடுக்க மத்திய பிஜேபி மந்திரிசபை முடிவெடுத்தது என்ற போது நெடுவாசல் திட்டத்திற்கும் காங்கிரஸ் மற்றும் சிதம்பரத்திற்கும் சம்பந்தமேயில்லை.

*************************************
3) கேள்வி = இந்த திட்டத்துக்கு அனுமதி கொடுத்த மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி யாரு?
பதில்= - ஆ.ராசா
கேள்வி - அவர் எந்த கட்சி?
பதில்= - தி.மு.க
-------------------------------------------------
நமது பதில்*

1996 இல் ராசாவா சுற்று சூழல் மந்திரி?
2004 இல்தான் ஆ.ராசா சுற்று சூழல் மந்திரி
ஆகி 3 வருடம் மட்டுமே அப்பொறுப்பில் இருந்தார்.

நெடுவாசல் திட்டத்திற்கு 2015 இல் மத்திய BJP அரசின் சுற்று சூழல் துறை மந்திரிதான் அனுமதி தந்துள்ளார்.

**********************************
4) கேள்வி =1996ல் மத்திய அரசு யார்?
பதில். = காங்கிரஸ் ஆட்சி
கேள்வி = தமிழ்நாட்டில் அப்போது யார் ஆட்சி ?
பதில் = திமுக ஆட்சி
-------------------------------------------------
நமது பதில்*

இந்த கேள்வி சகுனித் தனமானது.
 தமிழகத்தில் Oil  and natural gas எடுக்கும் பணி 1986 முதல் நரிமனம் , களப்பாள் ஆகிய இடங்களில் தொடங்கி 35 இடங்களில் நடந்து வருகிறது.
அப்போது அதிமுக ஆட்சி

 அதற்கு முன் 1959 வாக்கிலேயே   ஆய்வு பணிஆரம்பிச்சாச்சி.

1977 இல் இருந்து 2017 வரை அதிமுக 29 வருசம் ஆட்சியில் இருந்துள்ளது. திமுக 12 வருடமே ஆட்சியில் இருந்துள்ளது.

இந்த 41 வருட காலத்தில்தான் 35 இடங்களில் கிணறுகள் தோண்ட அனுமதிக்கப்பட்டு மீத்தேன்  எடுக்கப்பட்டு வருகிறது.

1985 லேயிருந்து இவ்வாறு எடுக்கப்படும் குரூட்ஆயில் மற்றும் இயற்கை வாயுக்களுக்கு ஆண்டுதோறும் ONGC தமிழக அரசிற்கு ராயல்டியும் வாட் வரியும் செலுத்துகிறது என்பதாவது தெரியுமா மடையர்களே.?

2014-15 க்கு மட்டுமே, தமிழக அரசுக்கு , ONGC மீத்தேன் எடுத்ததற்காக 300 கோடி ராயல்டி கொடுத்ததாவது எவனுக்காவது தெரியுமா?

இன்றைக்கும் தினமும் காவேரி படுகையில்3.8 மில்லியன் கியூபிக் மீட்டர் மீத்தேனும் 700 டன் ஆயிலும் ONGC யால் எடுக்கப்படுவதாவது தெரியுமா  ?

1959 முதல் 105 ஆயில் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளது.

அதற்கு மத்தியில் காங்கிரஸ்,  பாஜாகா அரசுகளே அனுமதி வழங்கியுள்ளன.

*************************************
5) கேள்வி = இப்ப போராட்டம் செய்யும் கட்சிகள் யார் யார்?
பதில் = திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்
கேள்வி =- அப்ப எதுக்கு போராட்டம் பன்னுறீங்க ???
பதில்= பாஜக தமிழ் நாட்டில் காலூன்ற கூடாது..
கேள்வி =- அப்ப என்னதான் இதற்கு முடிவு
பதில் = - அது தெரிஞ்சா நாங்க ஏன் தமிழ்நாட்டுல பொறக்கிறோம்
ஓ...அப்படியா?
************************************
நமது பதில்:-

தற்போதுதான் மக்களிடம் விழிப்புணர்வே வந்துள்ளது.
BJP யையும் அதன் அடிமையான அதிமுகவையும் எதிர்த்தே போராட்டம் நடக்கிறது ஏன் தெரியுமா?

ONGC தமிழகத்தில் கதிராமங்கலம் போல மேலும் 110
இடங்களில் எண்ணை எடுக்க
மத்திய Power ministry அனுமதி வழங்கியுள்ளது தமிழக பிஜேபி குஞ்சுகளுக்கு தெரியுமா

http://m.dailyhunt.in/news/india/english/asianet+newsable-epaper-asnewsab/ongc+plans+to+construct+wells+in+tamil+nadu-newsid-69517675

The Ministry of Power கீழ்கண்ட இடங்களில் எண்ணை கிணறுகளை தோண்ட போகிறது.

 5 கிணறுகள் காளி என்னுமிடத்திலும் குத்தாலத்தில் 10,  நரிமணத்தில் 10, அடியக்கமங்களத்தில் 5 , கீவளூரில் 3 , நன்னிலத்தில் 5, ஆதிச்சப்புரம் 4 , வடக்கு கோவில் களப்பாள்10, மாத்தூர் 3, பந்தநல்லுர்10, காஞ்சிரன்குடியில் 10, பெருங்குளம் பெரிய பட்டினம்10 இங்களிலும் பாக் ஜலசந்தியிலௌ 5 இடங்களிலும்
இனி வருங்காலங்களில் ONGC கிணறுகள் தோண்டப்போகிறது.

தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் தாண்டியே மேற்கண்ட திட்டங்களை தீட்டியுள்ளது BJP அரசு.
அதற்கு இதுவரை அதிமுக அரசு அனுமதி வழங்காவிடினும் பிஜெபியின் அழுத்தத்திற்கு அடிபணியாது என்று சொல்ல முடியாது.


http://m.timesofindia.com/city/chennai/ONGC-steps-on-the-gas-locals-put-brakes/articleshow/48647239.cms

2 comments:

  1. வட இந்திய கார்ப்பரேட் கூலி பாஜகவுக்கு சாதகமாக செயல்படும் தமிழக துரோகிகள் கண்ட கண்ட பொய் சொல்லி திரிகிறார்கள்
    தங்களின் உண்மை விளக்க பதிவுகள் அவர்களை அடையாளம் காட்டுகிறது

    ReplyDelete
  2. விரிவாகவும் தெளிவாகவும் சான்றுகளுடனும் விளக்கியிருக்கிறீர்கள்!
    அருமையான பயனுள்ள பதிவு!உண்மையை இனங்காட்டியிருக்கும் பதிவு!

    ReplyDelete