Monday 10 July 2017

கலைஞர் வன்னியருக்கு செய்தது துரோகமா? ஏன் இந்த பிதற்றல்? 40000 வழக்குகளை வாபஸ் பெற்றது யார்?

கலைஞர் வன்னியருக்கு செய்தது துரோகமா? ஏன் இந்த பிதற்றல்? 40000 வழக்குகளை வாபஸ் பெற்றது யார்?

MBC பிரிவில் 144 to 252 வரை 109 சாதிகள் உள்ளன.

இந்த மொத்த சாதிகளின் மக்கள் தொகையையும் சேர்த்தால் அதில் வன்னியர்கள் 90% இருப்பர். மற்ற 108 சாதிகளையும் சேர்த்தால் 10% கூட தேறாது.

இட ஒதுக்கீடு கேட்டு போராடாத அந்த 10% மக்களை கலைஞர் MBC யில் சேர்த்தது தப்பாம் ,துரோகமாம்.

அந்த 10% பிரிவினர் சமுதாயத்தில் வன்னிய மக்களை விட மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களே.

அவர்கள் சிறு குழுவினரே. போராடும் அளவிற்கு வலிமை பெற்றவர்கள் அல்ல. அவர்களை கலைஞர் விட்டு விட்டு MBC ஒதுக்கீடு செய்திருந்தால் அது சட்டப்படி செல்லாது.

அந்த 10% இல் உள்ளவர்கள் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட மிகவும் மோசமான நிலையில் உள்ளவர்களும் அடங்கும். அவர்கள் நீதிமன்றம் சென்று எளிதாக MBC இட ஒதுக்கீடு ஆணைக்கு தடை வாங்கிவிட முடியும்.

இதெல்லாம் தெரிந்தே கலைஞர் மிக மோசமான நிலையில் இருந்த அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து MBC யை உருவாக்கினார்.

உண்மையில் இன்று MBC கோட்டா மூலம் பயன் பெறுபவர்களில் 80% வன்னிய மக்களே.

மேலும் MGR ஆட்சியில் போராட்டம் நடத்திய வன்னிய மக்கள் மீது 40000 வழக்குகள் போடப்பட்டிருந்தன.
1989 இல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னரே 40000 வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டது.

மேலும் போராட்டத்தால் இறந்த 23 நபர் குடும்பங்களுக்கும் 3000 ரூ
மாதாந்திர solatium வழங்கவும் கலைஞரால்தான் உத்தரவிடப்பட்டது.

வன்னிய மக்களுக்கு வீரப்பாண்டியார் வேண்டுகோள் ஏற்று நன்மை செய்தது கலைஞர்.
ஆனால் அதை வைத்து கட்சி ஆரம்பித்து பலனடைந்தது ராமதாஸ். ஆனால் அத்துடன் நிறுத்தினாரா? வன்னியர்களுக்கு துரோகம் செய்த அதே அதிமுகவின் ஊழல் தலைவி 2001 இல் ஆட்சிக்கு வர உழைத்தவர் ராமதாஸ்தான்.

2001 க்கு பின்தான் தமிழகத்தில் சாராயம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது. அதாவது ஜெயா மூலம் மிடாஸ் சாராயம் பெருக்கெடுத்து ஓட துணை நின்றவர் இதே ராமதாஸ்தான்.

2011 வரை நண்பர்களாக தெரிந்த கலைஞரும் தளபதியும் இன்று துரோகிகளாக தெரிகின்றனர்.
இதை விட கலைஞருக்கு வேறு யாரும் துரோகம் செய்ய முடியாது.


நீங்க கலைஞருக்கு நன்றி சொல்ல வேண்டாம். ஆனால் ஆபாச அருவெறுப்பான வார்த்தைகளால் திட்டாமலாவது இருங்கள்.

No comments:

Post a Comment