Monday 17 July 2017

நன்றி கெட்டவர்களே*** கலைஞர் இல்லையென்றால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி என்பது பூஜ்யமே. இன்றைய தொழில் வளர்ச்சி கலைஞர் தந்த நன்கொடை .

நன்றி கெட்டவர்களே***
கலைஞர் இல்லையென்றால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி என்பது பூஜ்யமே. இன்றைய தொழில் வளர்ச்சி கலைஞர் தந்த நன்கொடை .

தமிழகத்தில் திமுக ஆட்சி வரும் முன் பெரிய தொழிற்சாலைகள் மட்டுமே உருவானது. ஆனால் சிறு தொழில்கள் மீது அக்கறை காட்டப்படவில்லை.

சிறுதொழில்கள் வளர்ந்தால் மட்டுமே ஒட்டு மொத்த சமுதாயமே வளர்ச்சி பெறும் என்பதை முதன் முதலாக உணர்ந்தவர் கலைஞரே.
அவரே தொழில்துறை புரட்சிக்கு வித்திட்டவர்.

தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழகம் The Tamil Nadu Small Industries Development Corporation Limited (SIDCO)
 16.3.1970 அன்று திமுக ஆட்சியில் கலைஞரால் தமிழக சிறுதொழில் வளர்ச்சிக்கென உருவாக்கப்பட்டது

#நோக்கங்கள்

தமிழகம் முழுவதும் தொழில் பேட்டைகள் அமைத்து அதனை பராமரித்தல்

தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை
வழங்கல்

மார்க்கெட்டிங் அமைப்புகளை அமைத்து பொருள் விற்பனைக்கு உதவுதல்

தமிழக அரசு ஆரம்பத்தில்  35  தொழிற்பேட்டைகளை உருவாக்கியது.

பின்னர் நிர்வாகம்
 agency terms அடிப்படையில் சிட்கோவிடம் 1974 இல் ஒப்படைக்கப்பட்டது
. SIDCO இதுவரை தானாக 59 தொழிற்பேட்டைகளை 1970
முதல் உருவாக்கி இன்று 94 தொழிற்பேட்டைகள் தமிழகத்தில் உள்ளது என்றால் அதற்கு கலைஞர் மட்டுமே காரணம்.

அவ்வாறே திமுக ஆட்சியில்தான் கலைஞரால்
State Industries Promotion Corporation of Tamilnadu Ltd (SIPCOT) என்ற தொழில் வளர்ச்சி கழகமும்  1971ஆம் ஆண்டு தமிழகத்தில் பெரும் தொழில்கள் உட்பட ஒட்டு மொத்த தொழிற் வளர்ச்சிக்கென உருவாக்கப்பட்டது.

SIPCOT தமிழகம் முழுமையாக இதுவரை 20 Industrial Complexes ஐ 12 மாவட்டங்களில் உருவாக்கியுள்ளது.  ஆறு செக்டார்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கியுள்ளது  Special Economic Zones (SEZs).

பெண் தொழிற் முதலீட்டாளர்களை உருவாக்கியது திமுகதான்

தொழில் வளர்ச்சியில் பெண்களுக்கு என தனியே தமிழகத்தில் கீழ்கண்ட 5 இடங்களில்
Women Industrial Parks  developed
5 இடங்களில் உருவாக்கப்பட்டது

1)கருப்பூர்  (Salem Dist.)
 வாளவந்தான் கோட்டை  (Trichy )
2) திருமுல்லைவாயில் (Thiruvallur )
3) திருமுடிவாக்கம்  (Kancheepuram )
4)கப்பலுர் (Madurai )
இதில்  Micro
Enterprises  G.O.Ms.No.7 MSME.Dept. dated 31.01.2009 படி 30% இடம் ஒதுக்கப்பட்டதுடன்

• 30% for பெண் Entrepreneurs
• 10% for Ex-servicemen
• 10% for SC/ST and Transgender.
 எனவும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.

1973ஆம் ஆண்டில் இராணிப்பேட்டையில் 729.78 ஏக்கர் பரப்பில் ஒரு தொழில் வளாகம் உருவாக்கப்பட்டு அங்கே 168 கோடி ரூபாய் முதலீட்டில் 107 புதிய தொழில்கள் தொடங்கப்பட்டது.

1974ஆம் ஆண்டில் ஓசூரில் 1236 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டாவது தொழில் வளாகம் அமைக்கப்பட்டு, அதில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் 186 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டது.


1989ஆம் ஆண்டில் கழக ஆட்சியில் இராணிப்பேட்டையில் இரண்டாம் பிரிவு தொழில் வளாகம் 133 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டு அங்கே 99 புதிய தொழில்கள் தொடங்கப்பட்டு 3400 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.

 ஓசூரிலும் இரண்டாம் பிரிவு தொழில் வளாகம் 457 ஏக்கர் நிலப்பரப்பில் 64 புதிய தொழில்களுடன் தொடங்கப்பட்டு, அங்கே ஏறத்தாழ 6 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றனர்.

1996இல் நான்காவது முறையாக கழக அரசு அமைந்த பின், திருப்பெரும்புதூர், இருங்காட்டுக் கோட்டை, கும்மிடிப்பூண்டி ஏற்றுமதி வளாகம் ஆகிய இடங்களில் சிப்காட் நிறுவனத்தால் புதிய தொழில் வளாகங்கள் அமைக்கப்பட்ட்டது.

ஆனால் 1975 க்கு பின் மீண்டும் 1989-91 மற்றும் 1996-2001 காலங்களில் தான் ஆட்சிக்கு வரமுடிந்தது. இடைப்பட்ட காலம் தமிழக தொழிற் வளர்ச்சியின் இருண்ட காலம்.

தமிழகத்தில் #தகவல்_தொழில்நுட்பத்_துறையின்_தந்தை_கலைஞர் . அவரது ஆட்சிக் காலத்தில் தான் தமிழகத்தில் ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் உருவாகின. கடந்த திமுக ஆட்சியில் தொழில் தொடங்குவதில் ஐ.டி.நிறுவனங் களுக்கு முன்னுரிமை அளிக்கப் பட்டது.

முதல்முதலாக தகவல் தொழிற்நுட்ப கொள்கை கலைஞரால்தான் 1997 இல் உருவாக்கப்பட்டது.

டைடல் பூங்கா (Tidel Park) சென்னையின் தரமணி பகுதியில் அமைந்த தகவல் தொழில்நுட்பக் கட்டிடம் ஆகும்.இதை உருவாக்கியது #கலைஞர்தான். ராஜீவ் காந்தி சாலையில் அமைந்துள்ள இக்கட்டிடம் 2000இல்
திறக்கப்பட்டது. டைடல்பார்க், ஆசியாவில் உள்ள மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பக் கட்டிடங்களில் ஒன்றாகும். இக்கட்டிடம், 119,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது

கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, சென்னைக்கு அடுத்ததாக, கோவையில் 380 கோடி ரூபாய் மதிப்பில், பிரமாண்டமான தகவல் தொழில் நுட்பப் பூங்கா (டைடல் பார்க்) கட்டப்பட்டது. மொத்தம் 17 லட்சம் சதுர அடி பரப்பில், எட்டு தளங்களுடன், சென்னை “டைடல் பார்க்’கை விட இது பெரிய அளவில் அமைக்கப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியினர் அதை சரியான பயன்பாட்டிற்கு இதுவரை கொண்டுவரவில்லை.

ஐ.டி. துறையில் முதல் 3 மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்ந்தது. அதிமுக அரசிடம் தொலைநோக்குப் பார்வை இல் லாததால் தமிழகத்தில் ஐ.டி. துறை பின்தங்கியுள்ளது. புதிய ஐ.டி. பூங்காக்கள் எதுவும் உரு வாகவில்லை. இருக்கும் ஐ.டி. நிறுவனங்களும் செயலிழந்து காணப்படுகின்றன. தமிழகத்தில் ஐ.டி. துறையில் தேர்ச்சி பெற்ற ஏராளமான இளைஞர்கள் இருக் கிறார்கள். அவர்கள் மூலம் ஐ.டி. துறையில் புரட்சியை ஏற்படுத்த முடியும்.

 இன்றைய தேதியில் 3,50,000 பேர் 1750 ஐ.டி கம்பெனிகளில் தமிழக ஐ.டி. துறையில் வேலைப் பார்க்கிறார்கள். 2010-11 இல் மட்டும் 42100 கோடி சாப்ட்வேர் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி ஆகியிருந்தது.

அது மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான தொழிற்சாலைகள் திமுக ஆட்சியில்தான் அனுமதி பெற்று துவங்கப்பட்டது.

இப்படி தமிழகத்தின் தொழிற்வளர்ச்சிக்கு வித்திட்ட கலைஞரை தமிழக தொழிற்புரட்சியின் தந்தை எனலாம்.

ஆனால் இந்த உண்மைகளை யாரும் பேசுவதில்லை என்பதே வருத்தமளிக்கும் செய்தி.


No comments:

Post a Comment