Tuesday 27 June 2017

திமுக ஆட்சி 2006-11

திமுக ஆட்சியில் 1.4.2006 முதல் 31.3 .2011 வரை

5 ஆண்டுகளில் வாங்கப்பட்ட மொத்த கடன் Revised Budget படி

வெறும் 43,892 கோடிதான்.

#திமுக_ஆட்சியின்_சாதனைகள்

ஆனால் 2006- 2011 திமுக ஆட்சிக்காலத்தில்தான் தமிழகம் முழுவதும் சுமார் 50000கோடிக்கு 4 வழிச்சாலைகள் போடப்பட்டது. சேது சமுத்திர திட்டம் , மதுரவாயல் துறைமுகம் சாலை, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட குடிநீல்திட்டங்கள்,ஆயிரக்கணக்கான மேம்பாலங்கள், கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள், சமச்சீர் கல்வி, சேதுசமுத்திர திட்டம், புதிய தலைமை அலுவலகம் , ஆசியாவின் பெரிய நூலகம் என எண்ணிலடங்கா திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தப்பட்டது.

அது மட்டுமா... தமிழகத்தில் சுமார் 50000 கோடிக்கும் மேல் புதிய தொழில் முதலீடுகள் வந்து தமிழகத்தில் தொழில் புரட்சியும் 5 ஆண்டு காவேரி தண்ணீர் முறையாக திறந்து விடப்பட்டு விவசாய புரட்சியும் நடந்தது. இத்தனைக்கும் மேலாக 7000 கோடி விவசாய கடன் ரத்து வேறு.
பெரிய மின் பற்றாக்குறை ஏற்ப்பட்டதால் புதிய மின் திட்டங்கள் பெரும் செலவில் தொடங்கப்பட்டது.

#அதிமுகஆட்சியின்_வேதனைகள்

ஆனால் கடந்த ஆறு ஆண்டு அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட ஒரே ஒரு உருப்படியான திட்டத்தை சொல்ல முடியுமா ?
மாறாக வெத்து வேட்டு விளம்பரங்களில் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டது. மிடாஸ் வருவாய் கூடியது.  மக்கள் சாராயத்திற்கு அடிமையாக்கப்பட்டனர். ஓடியது சாராய ஆறு மட்டுமே.
மேலும் மத்திய அரசு கல்வி மேம்பாடு, காவல்துறை மேம்பாட்டிற்கு  அனுப்பிய பல்லாயிரம்  கோடிகள் திருப்பி மத்திய அரசுக்கே  செலவிடப்படாமல் அனுப்பப்பட்டது


 தமிழக அதிமுக அரசின் லெட்சணம்
***************************************
1951-முதல் 2011 வரை
தமிழகஅரசு வாங்கிய மொத்த கடன்   1,00,349.   கோடி

2017 -18.  தமிழக அரசு கடன்                   3,14,366.   கோடி.
                                                                    **************   
ஜெ & பன்னீர் ஆட்சி  கடன்                       2,14,017   கோடி
                                                                    **************
2017-18. நிதிப் பற்றாக்குறை ரூ. 41,977 கோடி .

பாவிகளே! இந்த கேடுகெட்ட அரசையா இன்றும் ஏன் ஆதரிக்கிறீர்கள்?

By Antony Parimalam

No comments:

Post a Comment