Tuesday 27 June 2017

ஊழலுக்கு காரணம் திமுகவா பொதுமக்களா?


ஊழலை வளர்த்தது... ஊழலுக்கு ஆதரவு அளித்தது யார்?
சிந்திக்காமல் திமுக மீது சேற்றை வீசும் மடையர்களே**
1975 க்கு பின் கடந்த 40 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் இருந்தது  12 வருடங்கள் மட்டுமே. ஆனால் மீதமுள்ள 28 வருடங்கள் அதிமுகதான் தமிழகத்தை ஆண்டு வந்துள்ளது. 1996 -2001 திமுக ஆட்சியில் ஒரு சிறிய ஊழல் கூட நடந்தது கிடையாது. ஆனாலும் மக்கள் 2001 இல் மீண்டும் ஊழல் அதிமுகவையே ஆட்சியில் அமர்த்தினர்.

இந்த நிகழ்வுதான் இன்றைய ஊழலின் அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணம். 2001 தேர்தலில் அப்போது நேர்மையான ஆட்சியை தந்த திமுகவை மக்கள் தோற்கடித்தனரே ஏன்.?  அது மக்கள் தெரிந்தே செய்த தவறு. இப்போது ஊழல் ஊழல் என வயிற்றில் அடித்துக்கொள்ளும் இதே மக்கள்தான் 2001 இல் ஊழல் செய்த அம்மையாரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தி ஊழல் வளர்ச்சிக்கு வித்திட்டனர். இன்றோ எல்லை மீறி போய்விட்டது.
ஊழல் வளர்ச்சிக்கு நீங்களே காரணம் மக்களே ....அதன் பலனை அனுபவியுங்கள் வாழ்த்துக்கள்.

2006- 11 காலத்தில் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டாலும் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்ததை யாராலும் மறுக்க முடியாது. அதற்கு சாட்சியாக மத்திய அரசின் புள்ளிவிவரத்தை இப்போதும் பார்க்கலாம்.

'ஐம்பதாண்டுகால திராவிட ஆட்சியில்' அதிக காலம் நாட்டை ஆண்ட கட்சியாக அதிமுக இருந்தாலும், அந்த விமர்சனம் வைக்கப்படுவது திமுகவை நோக்கி மட்டுமே.

திராவிட ஆட்சி என்ன கிழித்தது என்று பல முறை இங்கே பட்டியலிடப்பட்டிருக்கிறது. நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணரான அமர்தியாசென்னே ‘தமிழகம் தனி நாடாக இருக்குமேயானால் அது சிங்கப்பூரை போல வளர்ந்த நாடாக இருக்கும்’ என்று சான்றிதழ் கொடுக்கிறார். அவர் என்ன திமுககாரரா?

திமுக ஆண்டபோதெல்லாம் தமிழன் முன்னேறியிருக்கிறான் என்பது வரலாறு. இதை எந்த கொம்பனாலும் மறுக்க முடியாது. இங்கே பாலாறும், தேனாறும் ஓடுகிறதா என்று கேட்டால் இல்லைதான். உலகின் நம்பர் ஒன் நாடான அமெரிக்காவிலேயே கூட அப்படி ஓர் ஆறு ஓடுவதாக தகவல்கள் இல்லை.

ஆனால்-

சமூகநீதியை அடிநாதமாக கொண்டு நடக்கும் ஆட்சி (திமுகவாக இருந்தாலும் சரி, அதிமுகவாக இருந்தாலும் சரி) உலகிலேயே தமிழகத்தில் மட்டும்தான் நடக்கிறது. பிற்படுத்தப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் திராவிட இயக்கங்களின் செயல்பாட்டில் சில குறைபாடுகள் இருக்கலாம். எனினும் பொதுவுடைமை சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் கம்யூனிஸ்ட் ஆட்சிகளைவிட சிறப்பான ஆட்சியை தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் கொடுத்திருக்கின்றன என்பதே புள்ளி விபரங்கள் தெரிவிக்கக்கூடிய வரலாறு. மனிதனை மனிதன் சுமக்கக்கூடிய கைரிக்‌ஷா கலாச்சாரத்தைகூட கம்யூனிஸ்டுகள் முப்பதாண்டுகள் ஆண்டும் கல்கத்தாவில் நீக்கமுடியவில்லை என்பதை தோழர்கள் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.

No comments:

Post a Comment