Wednesday 28 June 2017

மதவாத பாஜாகாவுடன் திமுக உறவு வைத்தது நியாயமா?

மதவாத பாஜாகாவுடன் திமுக உறவு வைத்தது நியாயமா?
பல அறிவாளி அரசியல்வாதிகள் இந்த கேள்வியை அடிக்கடி
கேட்கிறார்களே.  !!!!

இப்படி கேட்பவர்களுக்கு வாஜ்பாய்க்கும் மோடிக்கும் உள்ள வித்தியாசம் தெரிய வாய்ப்பில்லை.

இன்று மோடி நடத்தும் மதவெறி ஆட்டங்களை 1999 இல் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் செய்யவில்லையே ஏன்?
வாஜ்பாய் தனிப்பட முறையில் மிதவாதி என்பதாலும்  அன்று திமுக வாஜ்பாய் அரசுக்கு கடிவாளமாக இருந்ததும் குறைந்தப்பட்ச செயல்திட்டம் நடைமுறையில் இருந்ததுமே
காரணம்.

அதுதான் திமுகவின் கெத்து.

சரி ....என்ன சூழ்நிலையில் திமுக பாஜாகாவை ஆதரிக்க நேரிட்டது?

அந்த நிலையை உருவாக்கியது யார்?

1998ம் ஆண்டு, பாஜக அரசில், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, அதில் அங்கம் வகித்த ஜெயலலிதா  பிரதமர் வாஜ்பாயிடம் இரண்டு நிபந்தனைகள் போட்டார்

1) தமிழகத்தில் திமுக ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமென்றும்

2) ஜெயலலிதா மேல் இருந்த சொத்துக்குவிப்பு வழக்கை வாபஸ்
பெறவேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

இதற்காக ஜெயலலிதா வாஜ்பாய் அரசுக்கு தந்த அடாவடிகள் கொஞ்சநஞ்சம் அல்ல.

ஆனால்  கடைசி வரை அதனைக் கேட்க பாஜக வினரும், குறிப்பாக பிரதமர் வாஜ்பாயும் மறுத்து விட்டார்கள்.

இதனால் கோபத்தின் உச்சிக்கே போன ஜெயலலிதா ஒரே ஆண்டுக்குள் வாஜ்பாய் அரசையே கவிழ்க்க முடிவெடுத்தார்.

மத்திய உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியை தேச விரோதி என்று ஜெயலலிதா அப்போது விமர்சித்தார்.

வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஜெயலலிதா  திரும்பப் பெற்றுக் கொண்டதை அடுத்து, 16-4-1999ல் மக்களவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை வாஜ்பாய் முன்மொழிந்த போது, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவராக இருந்த முரசொலி மாறன் கீழ்கண்டவாறு பேசினார்.

 "  நேற்று வரை நான் இந்த அரசை எதிர்த்து வந்தேன். காவிரிப் பிரச்னை சிக்கலைத் தீர்த்த இந்த அரசுக்குரிய பெருமையைத் தவிர, இந்த அரசின் எந்தச் சாதனைகளையும் நான் பாராட்ட முடியாது. ஆனால் அதிமுக ஆதரவோடு நடைபெறும் ஆட்சிகவிழ்ப்பு முயற்சி தமிழகத்தின்  நலனுக்கும், இந்தியாவின் நலனுக்கும் எதிரானது. எனவே தற்போதைய அரசு தொடருவதை நாங்கள் ஆதரிக்கிறோம்"   என்று மாறன் பேசினார்.

"மதவெறியை மாய்ப்பதில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல, அது எங்கள் குருதியோட்டத்தோடு கலந்த ஒன்று. பாஜக கொள்கையில் நாங்கள் சமரசமாகி அந்த அடிப்படையில் இந்த முடிவை எடுக்கவில்லை" என்று கலைஞர் பத்திரிக்கைளிடம்  விளக்கினார்

 1998ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று, மத்திய ஆட்சியிலும் அங்கம் வகித்து, பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் படாதபாடுபடுத்தி, கடைசியில் ஆதரவையும் விலக்கிக் கொண்டு ஆட்சியைக் கவிழ்த்திருக்காவிட்டால், திமுக, பாஜகவுடன் கூட்டணி சேருகின்ற நிலை ஏற்பட்டிருக்காது. பாஜக ஆட்சியைக் கவிழ்த்து, அவர்களை நிராதரவாக விட்டுவிட்ட நிலையில் மனிதாபிமான எண்ணத் தோடு, அதே நேரத்தில் சிறுபான்மைச் சமூகத்தினருக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற எழுத்துப்பூர்வமான  உத்தரவாதத்தோடுதான் திமுக அந்த அணியோடு கூட்டு சேர நேரிட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக திமுக வாஜ்பாயை ஆதரித்தது ஒரு #நன்றிக்கடனே.

வாஜ்பாய் ஜெயலலிதா பேச்சைக் கேட்டு அவரின் வழக்குகளை வாபஸ் வாங்கியிருந்தால் , திமுக ஆட்சியை கவிழ்த்து இருந்தால் ஜெயலலிதா பிஜேபி ஆட்சியை கவிழ்த்திருக்க மாட்டார்.

#எனவே_நேர்மையாக_நடந்துக்_கொண்ட_வாஜ்பாயின்_அரசை_காப்பற்ற_வேண்டிய_அவசியமும்_கடமையும்_அன்று_திமுகவிற்கு_இருந்தது. அது காலத்தின் கட்டாயம்.


No comments:

Post a Comment