Thursday 29 June 2017

வம்பு மணி தளபதியிடம் அடிக்கடி கேள்விகள் கேட்டுள்ளதால் அவரிடம் நாம் முன் வைக்கும் சில கேள்விகள்.

வம்பு மணி தளபதியிடம் அடிக்கடி கேள்விகள் கேட்டுள்ளதால்  அவரிடம் நாம் முன் வைக்கும் சில கேள்விகள்.
1) கட்சியை ஆரம்பித்து அக்கட்சியின் ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் தன் குடுப்பத்தினரிடமே வைத்துக் கொண்டு தன்னை சின்னவரென்றும், தன் தந்தையை பெரியவரென்றும் அப்பாவி சொந்த கட்சிக்காரர்களை  அழைக்க வைத்து சந்தோசப்படுகிறீரே ....  நீங்கள் எந்த சாராய சாம்ராஜ்யத்தின் ஜமீனென்று சொல்ல முடியுமா ?

2) திமுகதான் வாக்குறுதியை காப்பாற்றாத கட்சி எனத் தெரிந்து விட்டதே. அப்புறம் எதற்கு 2011 இல் திமுக தலைவரின் காலில் விழுந்து கூட்டணி பிச்சை எடுத்தீர்கள்? அப்படியென்றால் மதுவிலக்கை விட நோட்டும் சீட்டும்தானே உமக்கு முக்கியம்.

3) திமுக போட்ட பிச்சையால் மத்திய மந்திரியான வம்புமணி... மதுவை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்? அடிப்படை வசதி இல்லாத மெடிக்கல் காலேஜிக்கு வாங்க வேண்டியதை வாங்கிகிட்டு அனுமதி கொடுத்தீரே. அதுதானே உமது சாதனை. சம்பாதிக்க மட்டும்தான் நேரம் கிடைச்சுதா?

4) சித்திரை திருவிழா என்கிற பேரில் கட்சிக்காரர்களை அழைத்து தண்ணி பார்ட்டி வைத்து மதுவிற்பனையை அதிகரிக்கச் செய்த உமக்கு மதுவிலக்கு பற்றி பேச என் யோக்கியதை இருக்கு?
சொந்த கட்சிக்காரர்களை கூட திருத்த முடியாத உம்மால் எப்படி நாட்டையே திருத்த முடியும்?

5) இத்தனை வருடங்களில் மாறி மாறி கூட்டணிக்கு பேரம் பேசியபோது  மதுவிலக்கை ஒரு முக்கிய கூட்டணி நிபந்தனையாக முன் வைக்காதது ஏன்?

6) தமிழகத்தின் ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுக தலைவியிடம் மதுவிலக்கை கொண்டு வர கோரி எத்தனை முறை கடந்த 4 ஆண்டுகளில் மனு கொடுத்தீர்?  தேர்தல் வருகிறது என்பதுடன் ஏன் இந்த நடிப்பு?

7) கடந்த 6 ஆண்டுகளில் எத்தனை முறை பொது மக்களை கூட்டி பெரிய அளவிளான மது எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினீர். ? ஏன் கடந்த 6 ஆண்டுகளாக வாய் மூடி கண்மூடி செயல்படாது இருந்தீர் ?

8) கடந்த காலங்களில் சாதி வெறியை தூண்டி மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி அதன் மூலம் கட்சி வளர்த்து பிழைப்பு நடத்தும் உமக்கு பலதரப்பட்ட சாதியினர் வாழும் நாட்டின் நிர்வாக அதிகாரத்தை எப்படி மக்கள் ஒப்படைப்பார்கள்.?

9) தர்மபுரி மக்களவை தொகுதிக்கு தேர்தெடுக்கப்பட்ட பின்னர் அந்த தொகுதி மக்களுக்கு சொல்லிக்கொள்ளும் படி எதுவுமே செய்யாத நீர் எந்த அடிப்படையில் தமிழகத்தை ஆள உரிமை கோருகிறீர்.?

10) கட்சி ஆரம்பித்து இத்தனை வருடங்களில் பொது நலத்திற்காக இதுவரை என்ன சாதனை உங்களால் நிகழ்ந்துள்ளது?  சொல்லமுடியுமா?

11) கட்சி ஆரம்பித்த போது தன் குடும்ப உறுப்பினர்கள் கட்சி பதவிகளுக்கு வரமாட்டார்கள் எனச்சொல்லி சொந்த கட்சிக்காரர்களையே ஏமாற்றிய நீர்
பதவிக்காக எதையும் செய்யும் நீர்
தேர்தலுக்கு முன் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர் என்று எப்படி நம்புவது?

12) இப்படி மக்களுக்காக எந்த போராட்டமும் செய்யாமல், எந்த தியாகமும் செய்யாமல் தந்தையின் நிழலில் வாழ்ந்து வரும் உமக்கு,  தளபதியிடமே பதவி பிச்சை பெற்ற உமக்கு.... தளபதியிடம் கேள்வி கேட்க என்ன தகுதியுள்ளது?

No comments:

Post a Comment