Tuesday 27 June 2017

திமுகவும் திராவிடமும் தந்த வாழ்வு


'திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் நபர்கள் யார் என்று பார்த்தால் அவர்கள் திராவிடத்தால்தான் வாழ்வு பெற்றவர்களாக இருப்பார்கள்.

இது அவர்கள்  பிழைப்பிற்காக செய்யும் வாதம்.
இந்தியாவில் வெற்றி பெற்ற ஒரே இயக்கம் திராவிட இயக்கம் தான் என்பதை அவர்களும் நன்கு அறிவார்கள்.

ஓர் இயக்கத்தின் அடிப்படை நோக்கம் என்ன, அதைச் செயல்படுத்துவதற்கு அவர்கள் கையாண்ட முறை என்ன, அதில் அவர்கள் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறார்கள் - இந்த மூன்றில் இருந்து தான் அந்த இயக்கத்தின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்க முடியும்.

திராவிட இயக்கத்தினர் அவர்களின் நோக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்களா ?

திராவிட இயக்கத்தின் அடிப்படையே சமூகநீதிதானே. இதனை உயர்சாதி ஆதிக்கத்திற்கு எதிரான போர் அல்லது அனைவருக்கும் சமவாய்ப்பு என்றும் அழைக்கலாம்.

இட ஒதுக்கீட்டில் 69 சதவீதம் என்பது பெரிய சாதனையில்லையா?

இதற்குள்ளும் நடைமுறை  குறைகள் இருக்கலாம்.  அது கட்சியின் பிரச்சனை அல்ல. இட ஒதுக்கீட்டை முழுமையாகப் புரிந்து கொள்ளாததால் வரும் முரண்பாடுகள் சில இருக்கலாம்.

இட ஒதுக்கீட்டில் திராவிடம் ஆளும் தமிழகத்திற்கும் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் இதுதான் வித்தியாசம்.

1971 சட்டநாதன் கமிஷன்  இடஒதுக்கீடு வருமான அடிப்படையில் இருக்க வேண்டுமென பரிந்துரை செய்தது.

ஆனால் அதை திமுக ஏற்காமல் மொத்த இட ஒதுக்கீட்டை 49% ஆக அதிகரித்தது.

அதன் பின்னர் MGR இட ஒதுக்கீட்டை பெற ரூ 9000 ஐ ஆண்டு வருமானமாக நிர்ணயித்தார். திமுக கடுமையாக இதை எதிர்த்தது.

1989 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த #திமுக வருமான அடிப்படை ஒதுக்கீட்டை ரத்து செய்து மொத்த இட ஒதுக்கீட்டை 69% ஆக உயர்த்தியது. ST பிரிவிற்கு1% மற்றும் MBCக்கு 20% மும் கொண்டு வந்தது திமுகதான்.  இதனால் பயன் பெற்றது வன்னியர்கள்தான்.

அதன் பின்னர் 1992 ஜெ ஆட்சியில்  அரசியலமைப்பு சட்டம் செட்யூல் 9 இல் இடஒதுக்கீடு ஏற்றப்பட்டது.


இந்தியாவில் இடஒதுக்கீடு– 50% (OBC – 27.5%, SC – 15%, ST – 7.5%)

தமிழகத்தில் இட ஒதுக்கீடு – 69% (BC -30%, MBC – 20%, SC - 18% (15% + 3% EXCLUSIVELY FOR ARUNDHATHIYAR COMMUNITY) AND ST – 1%)

மேலும் BC யில் முஸ்ஸீம் BC க்களுக்கும் 3.5 % இட ஒதுக்கீட்டை திமுக செய்துள்ளது.

ஆகஸ்டு 2006 இல் இந்தியா முழுவதும் இடஒதுக்கீட்டிற்கு எதிராக கடும் போராட்டங்கள் நடந்தது. ஆனால் தமிழகத்தில் எந்த போராட்டமும் நடக்கவில்லையே ஏன்? அதுதான் திராவிடத்தின் வெற்றி.

இதுதான் திராவிடத்தின் #முதல்_சாதனை.

இடஒதுக்கீட்டால் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் கல்வி ,தொழில் சுகாதாரம் மனிதவள மேம்பாடு என அனைத்திலும் பெரும் புரட்சியே ஏற்பட்டுள்ளது. தமிழகத்தை இந்திய அளவில் ஒப்பிட்டு பார்த்தால் இந்த உண்மை புரியும்.
ஆனால் தமிழ்தேசியம் பேசும் மூடர்களுக்கு தமிழகம் அடைந்துள்ள வளர்ச்சி கண்களுக்கு தெரியாது.  இன்னும் தீர்க்கப்படாத விசயங்களை பற்றி மட்டுமே பேத்துவார்கள்.

பேத்துபவன் பேத்தி பினாத்திக்கொண்டே இருக்கட்டும்
நீங்க உங்க வேலையை பாருங்க திராவிட உடன் பிறப்புக்களே.




No comments:

Post a Comment