Tuesday 27 June 2017

கலைஞர் நினைத்திருத்தால் போரை நிறுத்தியிருக்கலாமாம் செம காமெடி

கலைஞர் நினைத்திருத்தால் போரை நிறுத்தியிருக்கலாமாம்

ஏன் சம்பந்தமில்லாமல் கலைஞரை அமெரிக்க ஜனாதிபதி  ரேஞ்சுக்கு கொண்டுட்டு போற?

1) 2009 இல் கலைஞர் தன் அரசை ராஜினாமா செய்திருக்கலாம். அதனால் மீண்டும் தேர்தல் வந்து நீங்களெல்லாம் ஈழத்தாய்க்கு ஓட்டு போட்டு மீண்டும் ஈழத்தாய் அப்போதே ஆட்சிக்கு வந்திருக்கும்.

2) 2009 இல் காங்கிரஸ் திமுக ஆதரவை நம்பி இல்லை. மத்தியில் ஆதரவை விலக்கியிருந்தால் ஒன்றும் நடந்திருக்காது.

3) தனது நெடுங்கால எதிரியை ஒழித்துக்கட்ட கிடைத்த சந்தர்ப்பத்தை இழக்க சிங்கள ராணுவமோ ராஜபக்சே வோ தயாரில்லை.

4) இந்தியாவோ, UNO வோ, அமெரிக்காவோ
யார் நினைத்திருந்தாலும் போரை நிறுத்தியிருக்க வழியில்லை.

கலைஞர் வயதுக்கு 1/2 நாள் உண்ணாவிரதம் இருந்து எதிர்ப்பை காட்டினார். ஆனால் அதை கூட செய்யாத தமிழ் தேசியவாதிகளுக்கு கலைஞரை நோக்கி கைக்காட்ட. குறைசொல்ல என்னடா யோக்கியதை இருக்கிறது?

அப்போது நீங்கள் செய்தது மிகச்சிறந்த உள்நாட்டு வெளிநாட்டு வசூல் வேட்டைதானே.

உச்சக்கட்ட போரின்போது சிங்கள வீரர்களை அச்சமயம் ராஜபக்சேவால் கூட கட்டுப்படுத்தியிருக்க முடியாது.
அத்தனை இழப்புகளை சிங்களப்படை சந்தித்துள்ளது.


கனிமொழியை இந்திய பிரதமர் லெவலுக்கு கொண்டு போய் கதைக்கிறீர்கள். அவர் தந்தையை இந்திய ஜனாதிபதி லெவலுக்கு கற்பனை செய்து கதைக்கிறீர்கள். இவர்களால் உங்கள் மக்களை  காப்பாற்றி இருக்க முடியுமா?  கொஞ்சம் அறிவை பயன்படுத்தி சிந்தியுங்கள்.  நீங்கள் சொல்லும் கனிமொழிதான் ஆறுமாதங்கள் ஜெயிலில் இருந்தார். அவர் தந்தை கலைஞரால் என்ன செய்ய முடிந்தது.

 போரின் போது நீங்கள் சொல்வது போல ராஜினாமா செய்திருந்தால் மீண்டும் ஜெயா ஆட்சிக்கு வந்திருப்பார். அது சரி கலைஞர் அரசு எத்தனை முறை ஈழப்பிரட்சினையால் பதவி இழப்பது?


ஐநா முதற்கொண்டு யாரையுமே உங்கள் நாட்டில் உள்ளே வந்து விசாரிக்க அனுமதிக்க மறுக்கும் லங்கா அரசை கனிமொழியால் கேள்வி கேட்க முடியுமா?

இதுவரையில் திமுக உங்கள் மக்களுக்கு
சாதகமாக நடந்து ராஜீவ் கொலை பழி வரை சுமந்ததே அதற்கு நீங்கள் என்ன நன்றி காண்பித்தீர்கள்?

இன்றும் கலைஞர் குடுப்பத்தை சொல்ல கூசும் அளவிற்கு அசிங்க படுத்தி கொண்டுள்ளீர்கள். இப்படியே தொடர்ந்து செய்தால் நாதியில்லாமல் போய்விடுவீர்கள்.
உச்சகட்ட போரில்  சரணடைந்த ஆயிரக்கணக்கானவர்கள் கனிமொழி சொல்லியா சரணடைந்தனர்?   கனிமொழி சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சரணடைவதை விட வேறு வழி அப்போது இருந்ததா?

வேண்டுமென்றே திமுக மீது பழிபோடும் மடத்தனத்தை நிறுத்துங்கள். உங்கள் மக்களை உண்மையில் நேசிப்பவர்கள் திமுகவினரே. தம்பி பிரபாகரன் என்றுமே கலைஞரையும் திமுகவையும் மதித்து ஆலோசனை கேட்டதேயில்லை. சகோதர யுத்தம் வேண்டாம் என்ற போதும் சகோதர போராளிக் குழுக்கள் அழிக்கப்பட்டனர்.

இப்போதும் சொல்கிறேன் திமுவை அசிங்கப்படுத்தி தமிழ்நாட்டில் உங்களுக்கு இருக்கும் கொஞ்ச நெஞ்ச ஆதரவையும் கெடுத்துக்கொள்தீர்கள்.
இதை வருத்தத்துடன் சொல்லிக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment