Wednesday 28 June 2017

சுதந்திர இந்தியா சந்தித்த முதல் ஊழல்

காமராஜர் மிகவும் நேர்மையானவர்தான். அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சி 1947 முதல் 1971 வரை செய்த மெகா ஊழல்கள் பற்றி தெரியுமா?
அந்த காலத்திலேயே ஊழல் சாம்ராஜ்யம் நடத்திய காங்கிரசில் காமராஜர் ஏன் இருந்தார்?

நல்லா இருந்த நாட்டை கலைஞர் வந்து ஊழல் செய்து கெடுத்துட்டாருன்னு இணையத்தில் புலம்பும் பழைய காங்கிரஸ்காரர்களை பார்த்திருப்பீர்கள்.

அந்தகால காங்கிரசை சேர்ந்தவர்களுக்கு கலைஞர்தான் ஊழலை ஆரம்பித்தார் எனச் சொல்ல அவர்களுக்கு யோக்கியதை உள்ளதா?

காமராஜர் சார்ந்திருந்த அன்றைய காங்கிரஸ் பெரிய ஊழல் கட்சியாக அன்று திகழ்ந்தது தெரியுமா?

தினம் தினம் இத்துப்போன சயின்டிபிக் கதையையும் ஆதாரமில்லாமல் தூக்கி எறியப்பட்ட சர்க்காரியா கமிசன் கதைகளையும் தினம் தினம் திமுகவினர் கேட்க வேண்டியுள்ளது .

இந்த விசயங்களை தலையில் வைத்துக் கொண்டு, திராவிட கட்சிகளிடம் பிச்சையெடுத்து பொறுக்கி தின்றதை மறந்த,  தமிழகத்தின் சாதி கட்சி தமிழ்தேசிய கட்சியினரும் கலைஞர் மீது சேற்றை வாரி பூசுவதையும் தினமும் Twitter,  Facebook இல் காணமுடியும்.

அதிலும் இந்த தமிழ்தேசிய கட்சிகள் காமராஜர் பெயரில் கலைஞரை கிண்டல் செய்வது கேனத்தனத்தின் உச்சம்.

சுதந்திர இந்தியாவில் நேரு இந்திரா காலத்தில் நடத்தப்பட்ட மெகா ஊழல்களையும் அதை மறைத்து ஊழலில் சம்பந்தப்பட்ட அதே நபருக்கு நேரு பதவி வழங்கிய லெட்சணத்தையும் இங்கே விவரிக்கிறேன்.

சுதந்திர இந்தியா சந்தித்த முதல் ஊழல்

1948ம் ஆண்டில் இங்கிலாந்துக்கான இந்திய தூதராக இருந்த கிருஷ்ண மேனன்  லண்டனைச் சேர்ந்த  ஒரு போலி நிறுவனத்திடமிருந்து 2000 ஜீப்புகள் வாங்க பரிந்துரை செய்தார்.

இதில் கொடுமை என்னவென்றால் அந்நிறுவனத்திற்கு மொத்த பணமும் முன்பணமாகவே வழங்கப்பட்டது


2000 ஜீப்புகளுக்கு பதிலாக வெறும் 155 ஜீப்புகள் மட்டுமே, அவையும் தரம் குறைந்ததாக வந்து சேர்ந்தது.

 பத்திரிக்கைகளில் பெரிய அளவில் செய்திகள் வந்தும், நேரு கிருஷ்ண மேனனை பாதுகாப்புத் துறை அமைச்சராக்கினார்.

யார் ஊழல் செய்தாரோ அவரையே அத்துறைக்கு மந்திரியாக்கிய நேருவுக்கு அந்த ஊழலில் தொடர்பில்லை என சொல்லமுடியுமா?

பலகோடி ரூபாய் ஊழல் என்பது ஏழாண்டுகள் கழித்துத் தெரியவந்தது.

2)  1949ல் ராவ் சிவ பகதூர் சிங் என்பவர், ஒரு வைரச் சுரங்க உரிமத்தை புதுப்பித்து தருவதற்காக சச்சேந்திர பாரன் என்ற வைர வியாபாரியிடம் ரூ.25,000 லஞ்சம் பெற்றதற்காக 3 ஆண்டுகள் சிறையில் இருந்தார். இந்த ராவ் சிவ பகதூர் சிங் யார் தெரியுமா ? மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்த அர்ஜுன் சிங்கின் தந்தை.

3)  1951ம் ஆண்டில், மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை செயலாளராக இருந்த எஸ்.ஏ.வெங்கட்ராமன் சம்பந்தப் பட்டது. ஒரே நிறுவனத்துக்கு சைக்கிளின் உதிரி பாகங்கள் அனைத்தையும் இறக்குமதி செய்ய ஆணையிட்டதில் ஊழல் நிரூபிக்கப் பட்டு, வெங்கட்ராமன் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார்.( நன்றி சவுக்கு)

4) முந்த்ரா - டி.டி.கிருஸ்ணமாச்சாரி ஊழல்

1957 ல் T.T.K. நிதி மந்திரியாக இருந்தபோது ஹரிதாஸ் முந்திரா என்பவருக்குச் சொந்தமான நிறுவனங்களின் பங்குகளை ரூ. 1,26,86,100 க்கு (ஒரு கோடியே இருபத்தியாறு லட்சத்து எண்பத்தி ஆராயிரத்து நூறு ரூபாய்க்கு) L.I.C.  வாங்கியது.   நிதித் துறையின் முதன்மைக் காரியதரிசி திரு. H.M.பட்டேல் அப்போது  L.I.C. யின் சேர்மனாக இருந்த K.R. கமல்நாதை வாங்கும்படி கூறினார்.  முந்திராவின் நிறுவனங்களெல்லாம் கான்பூரில் இருந்தன.

முந்திரா ஒரு தொழிலதிபரே இல்லையென்றும் ஆகவே அவர் நிறுவனத்தின் பங்குகள் உண்மையானவை இல்லையென்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதற்கு நீதிபதி சாக்லா விசாரணைக் கமிசன் அமைக்கப் பட்டது.

நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி நிதித் துறைச் செயலரின் நடவடிக்கைகளுக்கு, நிதி அமைச்சர் என்ற வகையில் கிருஷ்ணமாச்சாரியும் பொறுப்பு என்று  நீதிபதி சாக்லா கூறினார்.

 கிருஷ்ணமாச்சாரி பதவி விலகினார்.
ஆனால் இதே கிருஸ்மாச்சாரிக்கு நேரு 1963 இல் மீண்டும் Finance மந்திரி பதவி வழங்கினார்.

இதைவிட கேவலம் உண்டா?

அதன் பிறகு 1971ம் ஆண்டில் நகர்வாலா ஊழல் என்று பிரபலமாக அழைக்கப் பட்ட ஊழல்  என எண்ணற்ற ஊழல்கள்..

இதெல்லாம்  காமராசர் காங்கிரசில் இருந்த காலத்தில்தான் நடந்தது என்பதை கலைஞரை திட்டித் தீர்க்கும் காமராஜரின் வழி வந்தவர்களாக சொல்லிக் கொள்பவர்களுக்கு தெரியுமா? தெரியாதா?

அத்தனை மோசமான காங்கிரசில் காமராசர் ஏன் இருந்தார்?

சொல்லுங்கடே

1 comment: