Wednesday 28 June 2017

உழைப்பால் உயர்ந்த கலைஞர் ஊழல்வாதியா? மாறன் சொத்துக்களை கலைஞர் பெயரில் காண்பிக்கும் கேணயர்கள் **


உழைப்பால் உயர்ந்த கலைஞர் ஊழல்வாதியா?
மாறன் சொத்துக்களை கலைஞர் பெயரில் காண்பிக்கும் கேணயர்கள் **

75 சினிமா படங்களுக்கு கதை வசனம் எழுதியும் 21 படங்களுக்கு பாடல்கள் எழுதியும்
29 சினிமா படங்களை சொந்தமாக தயாரித்தும் வீடு கார் வசதிகளுடன் வாழ்ந்த கலைஞரை பார்த்து அசிங்கம் பிடித்த அற்பர்கள் கலைஞருக்கு எப்படி சொத்து வந்தது கேட்கிறார்கள்.

தலைவர் கலைஞர் தனது 24 வயதிலேயே மலைக்கள்ளன் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர். 28 வயதில் 1952 - ல் பாரதிர்ந்த "பராசக்தி" மூலம் பட முதலாளிகளின் பார்வையை தன்பக்கம் ஈர்த்தவர். இதற்கும் முன்பே, எத்தனைப் படங்கள். எம்.ஜி.ஆரை ஹீரோவாக்க மறுத்த இயக்குநர் எல்லீஸ் ஆர் டங்கனோடு, கலைஞர் வாதம்புரிந்து வென்றதை எத்தனைபேர் அறிவார்? 1957 - ல் தனது 33 - வது வயதில்தானே எம்.எல்.ஏ வானார். அதற்கும் முன்பே படவுலக முதலாளிகளின் வசூல்பட வசனகர்த்தாவாக வலம் வந்தவர் கலைஞர்!

புதையல், பராசக்தி படங்களுக்கு முன்பாகவே ‘மணமகள்’ படத்தின் திரைக்கதை-வசனம் எழுதிய கலைஞருக்கு படத்தயாரிப்பாளரான கலைவாணர் கார் வாங்கித் தந்ததுடன், அப்போது பெட்ரோல் தட்டுப்பாடு இருந்த காரணத்தால் அதற்குரிய டோக்கன்களையும் கொடுத்துவிட்டார். எழுத்தின் மூலமாக கார் சம்பாதித்த முதல் தமிழ்ப் படைப்பாளி அநேகமாக கலைஞராகத்தான் இருக்கும்.

கலைஞர் ஆட்சி 1969 -74 இல் ஊழல் நடந்ததாக எம்ஜிஆர் புகார் தந்த அடிப்படையில் சர்க்காரியா கமிசனை அமைத்தார் இந்திரா.

எம்ஜிஆர் 1977 இல் ஆட்சிக்கு வந்ததும் முதலில் அவர் சர்க்காரியா கமிசன் மீதுதான் மிகவும் அக்கறை கொண்டார்.

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் சர்க்காரியா கமிசனே கலைஞர் மீதான வீராணம் திட்டம் உட்பட முக்கிய ஊழல் குற்றச்சாட்டுகளை ஒத்துக்கொள்ளவில்லை. அப்போதைய முதல்மந்திரி எம்ஜிஆர் 1977 நவம்பர் 15 இல் அப்போதைய அட்வகேட் ஜெனரல் V.P. ராமனிடம் சர்க்காரியா கமிசன் தொடர்பாக அவரது ஆலோசனையை கேட்கிறார். அதற்கு ராமன் வெறும் வழிமுறைகள் கடைபிடிக்கப்படாமை ( impropriety)  என்ற ஒரு விசயத்தை வைத்து கலைஞர் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுப்பது என்பது  சாத்தியமும் அல்ல எனவும் அதற்கு அறிவுரை செய்வதும் இயலாது எனவும் பதிலாக தெரிவித்து விட்டார்.

ஆனால் ஹெலிகாப்டர் மூலம் பூச்சி மருந்து அடித்தது தொடர்பானஎம்ஜிஆரின் குற்றச்சாட்டு வ.எண் 11(B) க்கு மட்டும் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தார்.

ஆனால் சிபிஐ ஆல் கையாளப்பட்ட அந்த வழக்கும் பதிவு செய்யப்பட்டு போதிய ஆதாரம் இல்லாததால் பின்னர் மத்திய அரசாலேயே வாபஸ் பெறப்பட்டது.

இதுதான் சர்க்காரியா கமிசன் தொடர்பாக நடந்தது. ஆனால் கடந்த 40 வருடங்களாக இந்த நீர்த்து போன உப்பு சப்பில்லாத சர்க்காரியா கமிசன் கதையை வைத்தே கலைஞரை ஊழல்வாதியாக தொடர்ந்து பிரட்சாரம் செய்து வருகிறார்கள். 
ஒரே பொய்யை 2G மாதிரி தொடர்ந்து சொல்ல சொல்ல உண்மை போலவே மனதில் பதிந்து விடும்.

1974 க்கு பின் 1989-91மற்றும் 1996-2001 திமுக ஆட்சியில் திமுக மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் கிடையாது.

2006-11 திமுக ஆட்சியில் 2 G விவகாரத்தை ஊதி பெருக்கி ஊழல் என்றார்கள். ஆனால் ராசா மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இது வரை நிருபிக்கப்படவேயில்லை. அவர் வீட்டில் இருந்து வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் எதுவுமே கைப்பற்றப்படவில்லை. விரைவில் 2G தீர்ப்பு வெளி வந்து உண்மையை உணர்த்தும்.

மாறன் குடும்பத்தினர் சொத்துக்களை கலைஞர் பெயருக்கு எழுதி வைத்து கலைஞர் சொத்துக்கள் என்கிறார்கள் இந்த அயோக்கியர்கள்.

No comments:

Post a Comment