Wednesday 28 June 2017

கலைஞருக்கும் கட்ச தீவு தாரை வார்க்கப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.**

கலைஞருக்கும் கட்ச தீவு தாரை வார்க்கப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.**
பக்தவச்சலம் காலத்திலேயே அப்போது மந்திரியாக இருந்த ராமநாதபுரம் ராஜா முன்னிலையிலேயே 1964 லேயே கட்சதீவை பற்றி பேசி முடிவெடுத்து விட்டனர்.

1974 ஜூனில் திடீரென்று இந்திராகாந்தி மந்திரிசபையை கூட்டி கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைக்க முடிவெடுத்து  விட்டார்.
சட்டப்படி மாநில அரசின் தீர்மானமோ லோக்சபா ஒப்புதலோ பெறப்படவேயில்லை.

கலைஞருக்கே பேப்பரை படித்துதான் விசயமே தெரியும். அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து கலைஞர் சட்டசபை தீர்மானம் இயற்றினார். ஆனால் அதிமுக அதில் கலந்துக்கொள்ளவில்லை.

உண்மை என்னவென்றால் எம்ஜிஆர் நெடுமாறன் உட்பட எந்த தமிழக கட்சியும் கட்சத்தீவு ஒப்பந்தத்தை எதிர்க்கவேயில்லை.
அதற்கு இந்திராவின் மீதான பயமும் ஒரு காரணம்.
அன்று ஆண்மையோடு எதிர்த்த திமுக மீது இந்திரா கடும் சினம் கொண்டு 1976 மத்தியில் எமர்ஜென்ஸி மூலம் பழி தீர்த்ததுடன் 1976 ஆரம்பத்தில் திமுக ஆட்சியையே கலைத்து விட்டார்.

1974 ஒப்பந்தம் இன்று இருந்திருந்தால் அதை வைத்து தமிழக மீன்பிடி உரிமையை இன்று கோரமுடியும்.

ஆனால் 1976 இல் திமுக ஆட்சியை கலைத்த இந்திரா அதே ஆண்டில் இலங்கையுடன் 1974 ஒப்பந்தத்தை திருத்தி புதிய கட்சத்தீவு ஒப்பந்தத்தை போட்டார். இந்த ஒப்பந்தத்தில்தான் தமிழக மீனவர்களின் மீன் பிடிக்கும் உரிமை எல்லை நிர்ணய அடிப்படையில் பறிபோனது.

1976 ஒப்பந்தம் போடபட்டபோது லோக்சபாவோ சட்டமன்றமோ கிடையாது என்பதால் அது சட்டப்படி செல்லும். மேலும் 1982 எம்ஜிஆர் ஆட்சியில் முறைப்படி இலங்கைக்கு அரசு உத்தரவு மூலம் கட்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது.

எனவே கச்சதீவை இந்திய நீதிமன்றம் மூலமாக இனி மீட்க இயலாது. எம்ஜிஆரால் தாரை வார்க்கப்பட்ட கட்சத்தீவை மீட்க போவதாக சொல்லி ஜெ போட்ட வழக்கு மக்களை ஏமாற்றப் போட்ட ஒரு நாடகம்தான்

மீனவர்களின்  மீன்பிடி உரிமை பறிபோனது 1976 இல் போடப்பட்ட இறுதியான கட்சத்தீவு ஒப்பந்தத்தான்.

முறையாக இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது 1982 இல்தான் .

1976 இல் கலைஞர் ஆட்சியிலேயே இல்லையே. அவருக்கும் கட்சத்தீவு ஒப்பந்தத்திற்கும் என்ன சம்பந்தம்.?

1974 இல் தமிழகத்தின் எதிர்கட்சிகள் கலைஞரோடு சேர்த்து ஒற்றுமையாக இந்திராவை எதிர்த்து போராடியிருந்தால் 1976 இல் கட்சத்தீவு ஒப்படைக்கப்பட்டதை தடுத்து இருக்கலாம்.

அன்று ஒப்பந்தத்தை எதிர்த்த கலைஞரை வசைபாடிய எதிர்கட்சிகள்
அன்று இந்திராவுக்கு பயந்து கழிப்பறையில் ஒளிந்து கொண்ட எதிர்கட்சிக்கட்சிகள்
இன்று கலைஞரை குறை சொல்கின்றனர்

கட்சத்தீவு ஒப்படைக்கப்பட்ட போது திமுகவுடன் சேர்ந்து இந்திராவை எதிர்த்து கருத்து தெரிவிக்காத எவனுக்கும் கலைஞரை கேள்வி கேட்க யோக்கியதை இல்லை

1 comment: